சூடுபிடித்த அமெரிக்க தேர்தல் களம்: டிரம்ப் - பிடன் இடையே காரசார விவாதம்| Dinamalar

சூடுபிடித்த அமெரிக்க தேர்தல் களம்: டிரம்ப் - பிடன் இடையே காரசார விவாதம்

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (3)
Share
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்
DonaldTrump, JoeBiden, Debate, US, PresidentElection, டிரம்ப், பிடன், விவாதம், அமெரிக்க, அதிபர், தேர்தல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். அந்தவகையில் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெற்ற விவாதத்தில் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினர்.


latest tamil news


விவாதத்தில் பிடன் பேசுகையில், ‛இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக மிக மெதுவான பொருளாதார மீட்புதான் இப்போது உள்ளது. தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் உங்களை நம்புவதாக இல்லை; விஞ்ஞானிகளை தான் நம்புகிறோம். டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது; சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது,' என விமர்சித்து இருந்தார்.


latest tamil news


இதற்கு பதிலளித்த டிரம்ப், ‛கொரோனா விவகாரத்தில் ஜோ பிடன் சொல்வது எல்லாம் கேட்டு இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். H1N1 வைரஸ் விவகாரத்தை ஜோ பிடன் கையாண்ட விதம் என்பது மிகப்பெரிய பேரழிவு. ஜோ பிடன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்,' என குற்றம் சாட்டினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X