புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 19 வயதான பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு காங்., எம்.பி., ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் பெண் ஒருவர், வயல் வெளியில் வேலை பார்த்த போது அக்கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அவர் வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் நாக்கை அந்த கொடூரர்கள் வெட்டி உள்ளனர். மேலும் அவரின் முதுகு தண்டுவடம், கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கொடூரமாக தாக்கி ரத்த வெள்ளத்தில் சாலையில் வீசி சென்று உள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக உத்தரபிரதேசத்தில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டில்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்காமல், நேற்று இரவு 2:30 மணிக்கு போலீசாரே இறுதிச் சடங்குகளை நடத்தியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடைசியாக ஒருமுறை கூட தங்கள் மகள் முகத்தை பார்க்கவில்லை எனவும், தங்கள் மத முறைப்படி இறுதிச்சடங்கு நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போலீசார் அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம் என குடும்பத்தினரும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இச்சம்பவம் குறித்து காங்., எம்பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்தியாவின் ஒரு மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள், உண்மைகள் அடக்கப்படுகின்றன. இறுதியில் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவர் குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இது தவறானது; அநியாயமானது' என பதிவிட்டுள்ளார்.
भारत की एक बेटी का रेप-क़त्ल किया जाता है, तथ्य दबाए जाते हैं और अन्त में उसके परिवार से अंतिम संस्कार का हक़ भी छीन लिया जाता है।
ये अपमानजनक और अन्यायपूर्ण है।#HathrasHorrorShocksIndia pic.twitter.com/SusyKV6CfE
— Rahul Gandhi (@RahulGandhi) September 30, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE