பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 24 சதவீதம் அதிகம்

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020
Share
Advertisement
சென்னைவானிலை, மழை, தென்மேற்குபருவமழை, வடமாவட்டங்கள்,

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் வேப்பூர், வடபுதுப்பட்டு ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ., மழையும், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் பகுதிகளில் தலா 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news



மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்று பலமாக வீசும். மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் பெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X