பாபர் மசூதி வழக்கு: தலைவர்கள் கருத்து

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
BabriVerdict, BabriMasjid, Advani, பாபர்மசூதி, தலைவர்கள், அத்வானி, பாஜ, யோகிஆதித்யநாத்,

புதுடில்லி: பாபர் மசூதி வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்


latest tamil newsபா.ஜ., மூத்த தலைவர் அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, எனது தனிப்பட்ட மற்றும் பா.ஜ.,வின் நம்பிக்கையையும், ராமஜென்மபூமி இயக்கத்தின் மீதான உறுதித்தன்மையையும் நிரூபிக்கிறது.


latest tamil newsமுரளி மனோகர் ஜோஷி


வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. அயோத்தியில் டிச., 6ல் நடந்த சம்பவத்தில் சதிச்செயல் ஏதும் நடக்கவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் நடத்திய பேரணி, நிகழ்ச்சிகள் எதிலும் சதிச்செயல் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம். ராமர் கோயிலை கட்டி முடிக்கப்படும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.


latest tamil newsஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் வரவேற்றுள்ளார். ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், பா.ஜ., தலைவர்கள், விஎச்பி ஊழியர்கள், சன்னியாசிகள் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் அப்போதைய காங்கிரஸ் அரசு பொய் வழக்கு போட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சதிச்செயலுக்கு காரணமானவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


latest tamil newsசிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்

நானும், சிவசேனா கட்சியும் தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை வாழ்த்துகிறோம்.


காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா


பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அரசியல்சாசனத்தன் ஆன்மாவுக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வானது, மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக்கூறியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்


பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ., தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு மத வழிபாட்டு தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயமாகும். அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இந்த வழக்கில் நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படி செயல்பட தவறிவிட்டது.ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி


இன்றைய தினம், நீதித்துறை வரலாற்றில் சோகமான நாள். சதிச்செயல் இல்லை என நீதிமன்றம் கூறுகிறது. இதற்கு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் தேவைப்படும் என்பதை விளக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
30-செப்-202022:43:49 IST Report Abuse
naadodi சுடலையாரே: " எந்தவொரு மத வழிபாட்டு தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயமாகும். அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். "உங்க வாதத்துக்கே வருவோம்..உம்மை வீட்ல எவனோ ஓருவன் வந்து இடித்து, தன் பெயரைப் போட்டுக் கொண்டால், நீர் வாயில் விரல் வைத்துக்கொண்டு சும்மா இருப்பீரா??
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
30-செப்-202020:45:40 IST Report Abuse
Sathya Dhara திரு சுடலை அவர்களே ..........ungal kudumba kollaiyaana alaikkatrai 2கி ஸ்பெக்ட்ரம் oozhal வழக்கில் .......என்ன நடந்தது.....ஆதாரங்கள் கைக்கு கிடைக்கவில்லை என்று விடுதலை......ஸ்பெக்ட்ரம் oozhal வழக்கில் .....இப்போது நெஞ்சை நிமிர்த்தி கூறுங்கள் வழக்கில், குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ., தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு பொது சொத்தை கொள்ளை அடிப்பதும் மூட்டை அடிப்பதும் அநியாயமாகும். அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இந்த வழக்கில் நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படி செயல்பட தவறிவிட்டது..." என்று கூறுங்கள் சுடலை அன்னான் அவர்களே.
Rate this:
Cancel
30-செப்-202019:50:49 IST Report Abuse
theruvasagan கவலைப்பட வேண்டாம் சப்பான் துணை முதல்வர் அவர்களே. அடுத்து நடக்கவிருக்கும் அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ முன்னெச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டணை வாங்கிக் கொடுக்கும்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
01-அக்-202009:33:07 IST Report Abuse
Sathya Dhara அருமையான கருத்து. திரு தெருவாசகன் அவர்களே....அருமை அருமை அருமை. இதைத்தான் தேசப்பற்று மிக்க, நலமோடு வாழ விரும்பும் அனைத்து பொதுமக்களும்...ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். தீயவர்களை கொள்ளைக்காரர்களை, ஊழலை தெய்வம் நிச்சயம் கொல்லும் ..ஆனால் நின்று கொள்ளும்.... தண்டனையில் இருந்து தப்பவே முடியாது. தப்பவே கூடாது. தமிழகமே ஆவலுடன் காத்து இருக்கும் முடிவு இது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X