பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் நவ., 2ல் பள்ளிகள் திறப்பு: ஜெகன்மோகன் அறிவிப்பு

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

அமராவதி: 'ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளிகள் அனைத்தும் நவ., 2ம் தேதி முதல் திறக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.



latest tamil news



பள்ளிகள் திறப்பது குறித்து, காணொலிக் காட்சி மூலம் அதிகாரிகளிடம் நேற்று மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு அக்., 5ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுவதாக இருந்தது. அன்றைய தினமே மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சாக்ஸ், பெல்ட், பள்ளிப் பை ஆகியவை வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.


latest tamil news




தற்போது அதிகாரிகளுடனான ஆலோசனையில், பள்ளிகளை மீண்டும் நவ., 2ம் தேதி முதல் திறக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. எனினும் அக்., 5ம் தேதி பாடப் புத்தகம் மற்றும் பள்ளி சார்ந்த உபகரணங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202022:44:22 IST Report Abuse
ஆப்பு வாழ்த்துக்கள் பிரதர். கொரோனா குறைஞ்சா எங்களோட கைதட்டலும், வெளக்கேத்தலும் தான் காரணம்னு சொல்லிக்க ஒரு க்ரூப் இருக்கு. ஜாக்கிரதை.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-செப்-202018:46:35 IST Report Abuse
S. Narayanan திட்டமிட்டு செய்யும் எந்த வேலையும் வெற்றி பெரும்.
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
30-செப்-202018:15:04 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே ரெண்டு நாள் முன்ன கட்சி ஆரம்பித்து, நேற்று ஆட்சிக்கு வந்த புள்ள என்ன தீர்க்கமா சொல்லுது பாருங்க. நமது மாநிலத்திலே.. கல்வி அமைச்சர் சொல்லுறார் இப்போதைக்கு இல்லை... தலைமை செயலாளர் இரண்டு நாளில் அக்டோபர் மாதம் ஐந்து தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அனைவருக்கும் செய்தி அனுப்புகிறார். நேற்று முதலமைச்சர் அதெல்லாம் எதுவும் இல்லை என்று பேட்டி கொடுக்கிறார். என்ன நடக்கிறது தமிழகத்தில்? கல்வி மனதிற்கு இவை தெரியுமா? தலைமை செயலாளர் அனுப்பிய செய்தி முதலமைச்சருக்கு தெரியுமா? கண்ண கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கு. ஒன்னு உண்டுன்னு சொல்லுங்க.... இல்லைன்னு சொல்லுங்க.... மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பாதீர்கள். தமிழ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு இந்த மாநில கல்வி அமைச்சர் பாஸ் போடலாம், மத்திய கல்வி பாடத்திட்டம் படிப்பவர்களுக்கு நமது மாநில அமைச்சர் பாஸ் வழங்க இயலாது என்பது இவர்களுக்கு தெரியுமா ? பொறியியல் கல்வி அல்லாடுகிறது. தமிழக கல்வி டாஸ்மாக் அடித்தாற்போல தள்ளாடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X