பொது செய்தி

இந்தியா

அதிநவீன பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
BrahmosMissile, AtmaNirbharBharat, DRDO_india, BRAHMOS, Rajnathsingh, DRDO,

புதுடில்லி: பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது.

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இன்று காலை 10:30 மணியளவில் இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. டிஆர்டிஓவின் பிஜே-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணையில் உள்ள ஏர் பிரேம் மற்றும் பூஸ்டர் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.

இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிஆர்டிஓ தலைவர் சதீஷ்ரெட்டி, இந்த ஏவுகணையில், வருங்காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சேர்ப்பதற்கு இன்று நடந்த சோதனை உதவும் எனக்கூறியுள்ளார்.


latest tamil news



பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் மற்றும் ஏர்பிரேமுடன் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, தன்னிறைவு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
01-அக்-202004:47:15 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளே
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-செப்-202018:47:01 IST Report Abuse
Lion Drsekar தினம் தினம் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் நாம் கவலைபப்டுகிறோம், இயற்க்கை நல்லவர்களை மிகவும் சோதனைக்கு ஆளாக்குகிறது, ஆகவே இதுபோன்ற ஏவுகணைகளை வைத்துதான் நம் மக்களை நம் சமூக விரோதிகள் இடமிருந்து காப்பாற்றவேண்டிய ஒரு நிலை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
30-செப்-202018:45:08 IST Report Abuse
dina இனிமேல் தான் ரொம்ப ஜாக்கிரதையாக செயல்படவேண்டும் எல்லா அந்நிய நாட்டு கைக்கூலிகளும் சேர்ந்துகொண்டு அது வெஸ்ட் அது வேஸ்ட் என்று கூக்குரல் எள்ளுப்புவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X