இளம்பெண் உடல் இரவோடு இரவாக தகனம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

Updated : அக் 02, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
உ.பி., இளம்பெண் உடல் தகனம்:  எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ஹத்ராஸ் : உத்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல், இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

கடந்த செப்டம்பர், 14ம் தேதி, இங்குள்ள ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை, நான்கு பேர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.படுகாயங்களுடன் டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவத்தால், டில்லி மற்றும் ஹத்ராஸ் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரும், உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே, இரவோடு இரவாக அந்த பெண்ணின் உடல், ஹத்ராசுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, உடல் தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து, அப்பெண்ணின் சகோதரர் கூறுகையில், 'என் சகோதரியின் உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று, போலீசார் தகனம் செய்தனர்' என்றார்.இதுகுறித்து, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளதாவது:பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன், நான் தொலைபேசியில் நேற்று பேசினேன். தன் மகள் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதார்.
தன் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என என்னிடம் கூறினார். இறப்பிற்கு பின்பும், மனித உரிமைகளை பறிக்கும் விதத்தில், உ.பி., அரசு விளங்குகிறது. முதல்வராக தொடரும் தார்மீக உரிமையை, ஆதித்யநாத் இழந்துவிட்டார்.
இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ்

தலைவர் மாயாவதி கூறுகையில், “பெண்ணின் உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், இரவோடு இரவாக தகனம் செய்ததை பார்க்கும்போது, சந்தேகங்கள்
எழுகின்றன. போலீசின் இந்த தவறான அணுகுமுறையை கண்டிக்கிறோம்,” என்றார்.

விசாரணை குழு அமைப்பு!

உயிரிழந்த பெண்ணின் தந்தையுடன் பேசிய, உ.பி., முதல்வர் ஆதித்யநாத், அந்த குடும்பத்திற்கு, ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்தார். மேலும், இதை விசாரிக்க, விசாரணை குழுவையும் அவர் அமைத்தார். இதற்கிடையே, ஆதித்யநாத்திடம் பேசிய பிரதமர் மோடி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202018:45:26 IST Report Abuse
bigu இவர்கள் சாமி பேரை சொல்லியே ,அடாவடித்தனம் ,ரவுடித்தனம் செய்யும் அரசியல்வாதிகள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-அக்-202006:04:54 IST Report Abuse
 Muruga Velபாதிரிகள் பசங்களையே சின்னாபின்ன படுத்தற செய்திகள் நிறைய வருது .....
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
01-அக்-202013:33:07 IST Report Abuse
Svs yaadum oore இந்த ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் , குழந்தைகள், மற்ற ஜாதியினருடன் சேர்ந்து படிக்க முடியாது ... அம்பேத்கர் நவோதய திட்டம் மத்திய அரசு செயல்படுத்தட்டும் .... தமிழ் நாட்டுக்கும் இது தேவை ..விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் ..... இந்த திராவிட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா என்று பார்ப்போம்
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
01-அக்-202008:47:25 IST Report Abuse
Svs yaadum oore //....தலைவர் மாயாவதி கூறுகையில், ...//......அம்மா ஆட்சியில் உபி மாநிலத்தில் ஊரெங்கும் யானை சிலை வைத்தாங்க ...வேற என்ன செஞ்சாங்க ??....இத்தனை வருஷமா திராவிட கட்சிகள் இங்கே ஆண்டு ஜாதி வெறியை வளர்க்கலியா ??...போலீஸ் இது போல் தகனம் செய்தது கொடூரம் ...இந்த பிரச்சனை இந்தியாவை விட்டு ஒழிய ஒரே தீர்வு , பொருளாதார வளர்ச்சியும் , நகர மயமாக்கல் மற்றும் கடுமையான நீதி துறை ...நீதி துறை சீர்திருத்தம் அவசியம் தேவை ....குற்றம் செய்தால் தண்டனை என்ற பயம் இப்போது இல்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X