கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு வரும் மாணவியரிடம் தாலி அகற்றும்படி கூற தடை வருமா?

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : மருத்துவ நுழைவு தேர்வு எழுத வரும் திருமணமான பெண்களிடம், தாலி, மெட்டியை அகற்றும்படி நிர்ப்பந்திக்க தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் அரவிந்த்ராஜ் தாக்கல் செய்த மனு:மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக, 'நீட்' தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்துகிறது.
NEET, NEET exam, நீட், தேர்வு, தாலி, தடை

சென்னை : மருத்துவ நுழைவு தேர்வு எழுத வரும் திருமணமான பெண்களிடம், தாலி, மெட்டியை அகற்றும்படி நிர்ப்பந்திக்க தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் அரவிந்த்ராஜ் தாக்கல் செய்த மனு:மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக, 'நீட்' தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள், சிலவற்றை மையத்துக்குள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறைக்குள் நுழையும் முன், அவர்களை முழுமையாக பரிசோதிக்கின்றனர். தேர்வு எழுத வரும் மாணவர்களை, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதனால், மாணவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. பெண்களை துன்புறுத்துகின்றனர். திருமணமான பெண்களிடம், தாலியை அகற்றும்படி கட்டாயப் படுத்துகின்றனர். மெட்டி, மூக்குத்தி, காதணிகளை கழற்றும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.

சர்வதேச விமான நிலையங்களில் கூட, பாதுகாப்பு சோதனையின் போது, தாலியை அகற்றும்படி கூற மாட்டார்கள். ஏனென்றால், அது ஒரு புனிதமான குறியீடு. தாலியை அகற்றும் படி கூறுவது, பெண்களின் உணர்வுகளை பாதிக்கும்; மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, இந்த நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறுகின்றனர்.

தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; கண்காணிப்பாளர்கள் உள்ளனர். சோதனை என்ற பெயரில், தேர்வு எழுத வருபவர்களிடம் நடத்தும் கெடுபிடியை நிறுத்த வேண்டும்.எனவே, திருமணமான பெண்களிடம் தாலி, மெட்டி, மூக்குத்தி, காதணியை அகற்றும்படி கோருவதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram, nigeria - Lagos,நைஜீரியா
01-அக்-202022:57:15 IST Report Abuse
ram, nigeria Nothing series about it. They have already d the precautions and restrictions and as student we need to follow them. if not someone should ensure that is being followed. We are always interest in "Questioning the rules of the game ". Just go to Xray centre, you will be told to remove all ornaments whatever it is . Thali, chain, etc etc. Not to worry on this. I know many hindu girls used to remove at bed time now a days.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
01-அக்-202020:27:17 IST Report Abuse
Balaji அபத்தத்தின் உச்சம். தேவையற்ற தெளிவில்லாத சோதனை, தடை விதி முறைகள். எல்லாத்தயும் பிரதமர் பாத்து தான் சரி செய்யணுமா? அடுத்தடுத்த நிலைகளில் அறிவுள்ள சிந்தனை திறன் உள்ள யாருமே இவைகளை, இந்த மாதிரி விதிகளை ஆய்வு செய்வதில்லையா? இதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டுமா? இந்த தேசத்திற்கு என்ன ஆகிவிட்டது இறைவா...
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
02-அக்-202008:36:19 IST Report Abuse
vadiveluஅதெப்படி இதை பற்றி தமிழகத்தில் மட்டும் சிலர் கவலை படுகிறார்கள்.ஒருவேளை மற்ற மாநிலங்களில் தாலி கட்டி கொள்வதில்லையோ....
Rate this:
Cancel
sakthi - Covai,இந்தியா
01-அக்-202017:03:11 IST Report Abuse
sakthi பஞ்சாபில் நீட் எழுதும் சீக்கிய மாணவர்கள் தங்கள் தலையில் உள்ள டர்பனை கழட்டி விட்டா நீட் எக்ஸாம் எழுதுகிறார்கள்? அப்படி என்றால் பரீட்சை எழுதும் ஹாலில் கேமரா எதற்கு எக்ஸாமினேர் எதற்கு. எல்லாவற்றையும் நீக்கி விடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X