இந்திய ரயில் திட்டங்களுக்கு புதிய வளர்ச்சி வங்கி ரூ.5,466 கோடி கடனுதவி| Dinamalar

இந்திய ரயில் திட்டங்களுக்கு புதிய வளர்ச்சி வங்கி ரூ.5,466 கோடி கடனுதவி

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (2)
Share
பீஜிங் : இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு ரயில் திட்டங்களுக்கு, 'பிரிக்ஸ்' அமைப்பின், புதிய வளர்ச்சி வங்கி, 5,466 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகள் அடங்கியது, பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது, என்.டி.பி., எனப்படும் புதிய வளர்ச்சி வங்கி. உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு
New Development Bank, BRICS Development Bank, BRICS, NDB

பீஜிங் : இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு ரயில் திட்டங்களுக்கு, 'பிரிக்ஸ்' அமைப்பின், புதிய வளர்ச்சி வங்கி, 5,466 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகள் அடங்கியது, பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது, என்.டி.பி., எனப்படும் புதிய வளர்ச்சி வங்கி. உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு, இந்த வங்கி, கடனுதவி அளித்து வருகிறது.

சீனாவின் ஷாங்காயை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த வங்கியின் நிர்வாகக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு திட்டங்களுக்கு, கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news



மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு, 2018ல் ஏற்கனவே கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 1,778 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படுகிறது. மொத்தம், 14.47 கி.மீ., துாரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

இதைத் தவிர, தேசியத் தலைநகர் டில்லியில் இருந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், மீரட்டை இணைக்கும் வகையிலான, மண்டல பறக்கும் ரயில் திட்டத்துக்கு, 3,688 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 82.15 கி.மீ., நீளத்துக்கு அமைய உள்ள இந்த ரயில் திட்டத்தில், 14.12 கி.மீ., ரயில் பாதை, பூமிக்கு அடியில் இருக்கும். இந்த ரயில் பாதையில், 180 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.இவ்வாறு, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X