ம.பி.,யில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்: கமல்நாத் நம்பிக்கை

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
KamalNath, Congress, Bypolls, MP, Celebrate, Diwali, மத்திய பிரதேசம், கமல்நாத், காங்கிரஸ், இடைத்தேர்தல், ஆட்சி

போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், காங்கிரசில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியாவும் அவருக்கு விசுவாசமான சில எம்.எல்.ஏ.,க்களும் கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.,வில் இணைந்ததால் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்து. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. அங்கு காலியான 28 தொகுதிகளுக்கு நவ.,3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நவ.,10ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


latest tamil news



அங்குள்ள சுவசாரா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் கமல்நால் பேசியதாவது:
பாஜ., கட்சியினர் அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை கொண்டு விளையாடியுள்ளனர். குதிரை பேரம் மூலம் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். ம.பி., மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலை கொடுப்பார்கள். அதன்பின், காங்கிரசும் மக்களும் இணைந்து தீபாவளியை ஒன்றாக கொண்டாடுவர். வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளைப் பற்றி பேசும்போதெல்லாம், பாஜ., தலைவர்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பற்றி பேசி, முக்கிய பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகின்றனர்.

நாங்கள் 27 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தோம்; அதனை பாஜ., அரசும் சட்டசபையில் ஒப்புக் கொண்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, மீதமுள்ள விவசாயிகளின் கடன்களையும் நாங்கள் தள்ளுபடி செய்வோம். கடன் தள்ளுபடி குறித்து பொது விவாதம் நடத்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன். நீங்கள் (மக்கள்) எந்த வகையான அரசை விரும்புகிறீர்கள். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையா? அல்லது பணத்தால் உருவாக்கப்பட்ட அரசையா?. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vincent - Madurai,இந்தியா
01-அக்-202016:58:53 IST Report Abuse
Vincent 1980 இல் தமிழ் நாட்டில் எம்ஜிஆர் அரசை, 1984 இல் ஆந்தராவில் என்டிஆர் அரசை, அதற்கு பல வருடங்கள் முன்னரே கேரளாவில் ஈஎம்ஸ் அரசை, இன்னும் பல அரசுகளை கவிழ்த்த பெருமையுடைய காங்கிரஸ் கட்சி இப்போது கதறுவதில் எந்த பொருளும் இல்லை. இந்த கொள்ளைக்கார கத்தி ஒழிந்து போவதே நல்லது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-அக்-202016:48:36 IST Report Abuse
Endrum Indian நீங்க ஆட்சியை பிடித்தல் என்ன பிடிக்காவிட்டால் என்ன சாதாரண ஜனங்களுக்கு???? உங்களால் கொள்ளை அடிக்கமுடியவில்லை அந்த கமிஷன் பப்பு தி கிரேட்டுக்கு செல்லவில்லை இது ஒன்றே உங்கள் கட்சியின் தலையாய கொள்கை
Rate this:
Cancel
01-அக்-202016:47:30 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) சிந்தியாவை சமாதனப்படுத்த முடியவில்லை ,நீங்கள் ஒதுங்கி இருந்தால் ஆட்சி தப்பித்து இருக்கும் பதவி ஆசை யாரை விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X