இன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?: சிதம்பரம் சாடல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்னொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?: சிதம்பரம் சாடல்

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (51)
Share
புதுடில்லி: கொரோனா உயிரிழப்பு மற்றும் காற்று மாசு குறித்து இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனை குறிப்பிட்ட காங்., எம்பி., சிதம்பரம், ‛தனது உற்ற நண்பர் டிரம்பை கவுரவிக்க இன்னொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?' என சாடியுள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. அதிபர், டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி
Chidambaram, NamasteTrump, Modi, CoronaDeath, Pollution, Trump, சிதம்பரம், நமஸ்தே டிரம்ப், மோடி, கொரோனா உயிரிழப்பு, காற்று மாசு

புதுடில்லி: கொரோனா உயிரிழப்பு மற்றும் காற்று மாசு குறித்து இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனை குறிப்பிட்ட காங்., எம்பி., சிதம்பரம், ‛தனது உற்ற நண்பர் டிரம்பை கவுரவிக்க இன்னொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?' என சாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. அதிபர், டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டி யிடுகிறார்.ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் இடையேயான முதல் நேரடி விவாதம், ஓஹியோ மாகாணம், கிளீவ்லாண்டில் நடந்தது.


latest tamil news



அப்போது, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ‛கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாகச் செயல்படவில்லை. அதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது,' என்றும், ‛உலக வெப்பமயமாதலுக்கு அமெரிக்கா 15 சதவீதம் பொறுப்பு' எனவும் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‛சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான தரவுகளை அளிக்கவில்லை. அமெரிக்காவை விட இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம்,' என கூறியிருந்தார்.


latest tamil news



டிரம்பின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து காங்., எம்பி., ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனாவால் உயிரிழந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மறைப்பதாக டிரம்ப் பேசியுள்ளார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். தனது உற்ற நண்பரை கவுரவிக்க இன்னொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X