உ.பி., தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமை: தலைவர்கள் கண்டனம்| Dinamalar

உ.பி., தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமை: தலைவர்கள் கண்டனம்

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (20)
Share
லக்னோ: உ.பி.,யில், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.உ.பி., மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த 14ம் தேதி 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்து கடுமையாக
BalrampurHorror, uttarpradesh, உத்தரபிரதேசம், இளம்பெண், பலாத்காரம், தலைவர்கள், கண்டனம்

லக்னோ: உ.பி.,யில், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உ.பி., மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த 14ம் தேதி 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயங்களுடன் டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால், டில்லி மற்றும் ஹத்ராஸ் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த பெண்ணின் உடல் ஹத்ராசுக்கு இரவோடு இரவாக எடுத்து செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை உ.பி., போலீசார் கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், உ.பி., மாநிலத்தில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண் ஒருவர் காலையில் வேலைக்கு சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. நள்ளிரவு நேரத்தில், கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில் ரிக்ஷாவில் வீடு சேர்ந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில், ‛‛ஷாகித் மற்றும் ஷாகில் என்ற இரண்டு இளைஞர்கள் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே உடல்நிலை மோசமடைந்ததால், வீட்டிற்கு அழைத்து வந்ததாக'' தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் பலாத்காரம் மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த இளம்பெண்ணின் கால்கள் மற்றும் தண்டுவடம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள போலீசார், மருத்துவ பரிசோதனையில் இது உறுதிபடுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.

புலந்த்ஷாகர் மற்றும் அசம்கர் மாவட்டங்களில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தலைவர்கள் கண்டனம்


பலாத்கார சம்பவங்களுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
உ.பி.,யில் பெண்கள் மற்றும் அரசின் துன்புறுத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மகள்களை காப்போம் என்பது பா.ஜ.,வின் கோஷமல்ல. உண்மையை மறைப்போம், அதிகாரத்தை காப்போம் என்பதாகவே உள்ளது.
latest tamil news


காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:

ஹத்ரசில் நடந்தை கொடூரமான சம்பவம் போல், பல்ராம்பூரிலும் நடந்துள்ளது. இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டும், கால்கள் உடைக்கப்பட்டுள்ளன. அசம்கார்க், பாக்பாத் மற்றும் புலந்த்சாகரில் பெண் குழந்தைகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு ஆகியவை வெறும் பேச்சுகள் மூலம் மட்டும் செயல்படாது. முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது. பொது மக்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர்.latest tamil news


உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:ஹத்ராஸ் நகரை தொடர்ந்து தற்போது பல்ராம்பூரில் மற்றொரு இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் இளம்வயதிலேயே உயிரிழந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். ஹை்ராஸ் சம்பவத்தில் அஜராக்கிரதையாக இருந்தது போல் இருக்காமல், பா.ஜ., அரசு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
latest tamil news


பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி கூறுகையில், ஹத்ராஸ் சம்பவத்திற்கு பிறகு, பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், அதேபோன்ற மற்றொரு பலாத்கார சம்பவம் பல்ராம்பூரில் நடந்துள்ளது. பா.ஜ., ஆட்சியில், கிரிமினல்கள், மாபியாக்கள், பலாத்கார குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகின்றனர். பெண்களுக்கு எதிராக, உ.பி.,யில் தினமும் குற்றச்செயல்கள் நடந்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால், முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை அவரால் நிலைநாட்ட முடியவில்லை. அவரின் சொந்த இடமான கோரக்பூர் மடத்திற்கே அவரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் . இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X