காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படுவார்கள்: மத்திய அமைச்சர் உறுதி

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
BalrampurHorror, Naqvi, barbarism, up, Mukhtar Abbas Naqvi

புதுடில்லி: உ.பி.,யில் இளம்பெண்ணை வன் கொடுமை செய்து கொலை செய்து காட்டுமிரண்டித்தனமான செயலில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் முக்தர்அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், பல்ராம்பூர் பகுதியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா இருவரும் ஹத்ராஸ் சென்று, இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். இதற்காக டில்லியில் இருந்து கிளம்பியுள்ளனர். ஹத்ராஸ் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், உ.பி.,யில் காட்டுமிரண்டித்தனமான செயலில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். விசாரணைக்குழு, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் சுற்றுலா செல்லக்கூடாது. அரசியல் சுற்றுலா மூலம் பதற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள், அதனை நிறுத்த வேண்டும். இந்த சம்பவம் காரணமாக அனைவரும் சோகத்தில் உள்ளனர். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக உ.பி., அரசு பாடுபட்டு வருகிறது. விரைவில் அதற்கான பலனை பார்ப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
01-அக்-202019:41:00 IST Report Abuse
dina கற்பழித்தால் மட்டும் குரல் கொடுப்பார்களா ? சாதுக்களை கொன்றால் கூட குரல் கொடுப்பார்களா?
Rate this:
Cancel
01-அக்-202017:21:59 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தெலுங்கானாவில் பண்ணிய நடவடிக்கையை அணைத்து மாநிலத்திலும் தொடருங்கள் , நாடு குற்றவாளிகள் இல்லா தேசமாக மாறும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
01-அக்-202016:24:59 IST Report Abuse
Suppan ராகுல் ப்ரியங்கா போன்றவர்கள் கற்பழிப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதை வரவேற்போம். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் கற்பழிப்பு நடந்தாலும் இதே மாதிரி குரல் கொடுப்பார்களா?
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
01-அக்-202019:24:08 IST Report Abuse
suresh kumarகுறிப்பாக இப்பொழுது நடந்த ரியா வழக்கில்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X