படுக்கைகளுக்கும், தீவிர சிகிச்சை பிரிவிற்கும் பெரும் பற்றாக்குறை உள்ள இந்த நாட்களில், செவிலியர் முன் காத்திருக்கும் ஒரு பெரிய சவால் இது.
வந்து சேரும் கொரோனா தொற்று நோயாளி களில், யார் தீவிர தாக்குதலை சந்திப்பர், யார் மரணப் படுக்கை வரை செல்வர் என்பதை எப்படி அடையாளம் காண்பது?இந்தக் கேள்விக்கு, அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலுள்ள மாசாசூசெட்ஸ் பொது மருத்துவ மனையின் ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டு உள்ளனர்.
ஆர்.டி.டபிள்யு என்ற ரத்தச் சிவப்பணுக்களின் அளவு வேறுபாடுகளை அறியும் சாதாரண சோதனையை வைத்தே, ஒரு நோயாளி அதிகம் போராட வேண்டியிருக்குமா அல்லது மரணமடைய வாய்ப்பு அதிகமா என்பதை அறியலாம் என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பாஸ்டன் மருத்துவமனைகளில், கடந்த மாதங்களில் சேர்ந்த, 1,600 பேரின் ரத்த மாதிரிகளை வைத்து சோதித்து, அவர்கள் பிழைத்தார்களா, இல்லையா என்பதை ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடிந்தது.
இந்த எளிய சோதனை முறையின் துல்லியத்தை உறுதி செய்ய முடிந்தால், நிரம்பி வழியும் மருத்துவமனைகளில், அதிக நம்பிக்கையுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையையும், கவனத்தையும் செலுத்த மருத்துவப் பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE