சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தெம்பு தரும் செல்லப் பிராணிகள்!

Added : அக் 01, 2020
Share
Advertisement
ஊரடங்கு காலத்தில், உளவியல் சமநிலை குலைதல், தனிமை உணர்வு மேலோங்குதல் போன்ற தொந்தரவுகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.இந்த நிலையை மாற்ற, செல்லப்பிராணிகள் உதவும் என, பிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.பிரிட்டனில், 'கோவிட்- - 19' பரவலை ஒட்டி, ஊரடங்கில் இருந்த, 6 ஆயிரம் பேரிடம், யார்க் ஆராய்ச்சியாளர்கள் கருத்துகளை
 தெம்பு தரும் செல்லப் பிராணிகள்!

ஊரடங்கு காலத்தில், உளவியல் சமநிலை குலைதல், தனிமை உணர்வு மேலோங்குதல் போன்ற தொந்தரவுகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.இந்த நிலையை மாற்ற, செல்லப்பிராணிகள் உதவும் என, பிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
பிரிட்டனில், 'கோவிட்- - 19' பரவலை ஒட்டி, ஊரடங்கில் இருந்த, 6 ஆயிரம் பேரிடம், யார்க் ஆராய்ச்சியாளர்கள் கருத்துகளை கேட்டறிந்தனர். இதில் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் மற்றும் எந்த வகை பிராணிகளையும் வளர்க்காதோரும் அடக்கம்.ஆய்வின் முடிவில், ஊரடங்கால் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும்போது, நாய், பூனை, குதிரை என்று வீட்டில் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவிட்டவர்களுக்கு, எவ்வித உளநிலை பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்தது.
மாறாக, அவர்கள் நல்ல மனப்பாங்குடன் இருப்பதும் தெரிய வந்தது.அதேபோல, பிராணி வளர்ப்போரிடம், தனிமை உணர்வும் குறைவாகவே இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு, 'பிலோஸ் ஒன்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X