கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உதவிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், இன்னொரு வித்தியாசமான கொரோனா ஆராய்ச்சி யும் நடக்கிறது.
தற்போது, வேறு நோய்களுக்கு தரப்படும் மருந்துகளில், ஏதாவது, கொரோனா வைரசை அழிக்குமா என்று, ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.அந்த வகையில், உடலில் ஏற்படும் கட்டிகளைக் கரைப்பதற்காக, மருத்துவர்கள் அதிக அளவில் எழுதித் தரும் 'அடாலிமமாப்' என்ற மருந்தை ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்த மருந்தினை, முதியோர் இல்லத்தில், கொரோனா தொற்றிய நோயாளிகள் மத்தியில், கொரோனா சிகிச்சைக்காக தந்து சோதனை செய்ய ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.இதற்காக, பிரிட்டனில் உள்ள முதியோர் இல்லங்களில், 750 தன்னார்வலர்களை அமர்த்தி சோதிக்கவுள்ளனர்.இந்த ஆய்வு பலன் தந்தால், கட்டிகளுக்கான மருந்தை, சற்று மாற்றி, கொரோனா சிகிக்சை மருந்தாக சந்தையில் அறிமுகப்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE