பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி,பிரதமருக்கான பிரத்யேக விமானம் இந்தியா வந்தடைந்தது

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
VVIP, Aircraft, AirIndiaOne, PM, President, விவிஐபி, பிரதமர், ஜனாதிபதி, பிரத்யேக, விமானம், ஏர்இந்தியாஒன்

புதுடில்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பயன்படுத்த பிரத்யேக மாக வாங்கப்பட்ட ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் இன்று டில்லி விமான நிலையம் வந்தடைந்தது.

இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணிக்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே இந்தியாவும் விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தமிட்டது. அதன்படி அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட விவிஐபி ‛ஏர் இந்தியா ஒன்'-ன் முதல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. இந்த பிரத்யேக விமானத்தின் விலை சுமார் ரூ.1400 கோடியாகும்.


latest tamil newsசிறப்பம்சங்கள்:


* 143 டன் எடை கொண்ட இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன்கொண்டது. படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

* பிரம்மாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் இந்த ரகமும் ஒன்று.

* அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில் இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது.

* ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச் சுட்டுவீழ்த்த முடியாது. ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் எனப்படும் Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) மற்றும் Self-Protection Suites (SPS) தொழில்நுட்பத்தை இந்த விமானம் கொண்டுள்ளது. இந்தியாவில் (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான். (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச் செயலிழக்க வைக்கமுடியும்.

* இந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை இடைநிறுத்தாமல் பயணிக்கும் திறன் கொண்டவை. இந்த விமானங்களை நன்கு பயிற்சிபெற்ற விமானப்படை விமானிகள் இயக்கவுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
02-அக்-202006:31:08 IST Report Abuse
Kalyan Singapore எளிமையானவர் என்பதற்காக சைக்கிளில் அமெரிக்காக செல்ல முடியாதே சொந்த உபயோகத்திற்காக எதாவது வாங்குகிறார் என்றால் குறை சொல்லலாம் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இந்த விமானத்தில் பயணித்திருப்பார் எளிமை வேறு திறமையாக கடமை ஆற்றுவது வேறு என்பதை புரிந்து கொள்ள நமக்கு நாளாகும்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-அக்-202004:23:56 IST Report Abuse
Mani . V இப்படித்தான் தலைவர்கள் எளிமையுடன் வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) முன்பெல்லாம் மக்களின் நலனை முன்னெடுத்து அரசியலில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது சுக போக வாழ்விற்காக அரசியலுக்கு வருகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X