பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,01) அதிகபட்சமாக சென்னையில் 1,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.53 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,289 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,68,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 550 பேருக்கும், செங்கல்பட்டில் 356 பேருக்கும், சேலத்தில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 260 பேருக்கும், தஞ்சாவூரில் 232 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், கடலூரில் 180 பேருக்கும், வேலூரில் 149 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், ஈரோடில் 145 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news



உயிரிழப்பு

இன்று சென்னையில் 18 பேரும், கோவையில் 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், ராணிப்பேட்டை, சேலம், திருச்சியில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், வேலூரில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், தென்காசி, திருவாரூரில் தலா ஒருவரும் என 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,53,846 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 511 பேரும், செங்கல்பட்டில் 474 பேரும், சேலத்தில் 378 பேரும், திருவள்ளூரில் 236 பேரும், கன்னியாகுமரியில் 186 பேரும், திருப்பூரில் 169 பேரும், கடலூரில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 152 பேரும், ஈரோடில் 150 பேரும், விழுப்புரத்தில் 147 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
01-அக்-202020:59:22 IST Report Abuse
S. Narayanan முகக்கவசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் கொரோனா நிச்சயம் ஒழியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X