தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா| Dinamalar

தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (19)
Share
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா, தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்திருப்பது அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.அதே வங்கியில் ஸ்வப்னாவுக்கு லாக்கர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான சந்தீப்புக்கும், ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்திற்கும் அந்த வங்கியில் கணக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா, தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்திருப்பது அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



latest tamil news



அதே வங்கியில் ஸ்வப்னாவுக்கு லாக்கர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான சந்தீப்புக்கும், ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்திற்கும் அந்த வங்கியில் கணக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்வப்னாவின் கணக்கிற்கு பல பேரிடமிருந்து பணம் வரவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் வங்கியின் மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டதில், ‛ அளவுக்கு அதிகமாக பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதால் முதலில் மறுத்தேன். ஒத்துழைக்க மறுத்தால் தங்களுடைய கணக்குகளை முடித்து கொள்வோம் என்று கூறினர். கோடிக்கணக்கில் பணம் புழக்கம் என்பதால் அவர்களுக்கு நான் ஒத்துழைத்தேன்' இவ்வாறு வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்நிலையில் ஸ்வப்பனா மற்றும் சந்தீப் வங்கி கணக்குகளில் நடந்த பரிமாற்றங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வங்கி மேலாளரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X