பல்ராம்பூர்:உத்தர பிரதேசத்தின், பல்ராம்பூர் மாவட்டத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால், மற்றொரு இளம்பெண் உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹத்ராஸ் பகுதியில், 19 வயது இளம்பெண்ணை, சிலர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இங்குள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில், இதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.கடந்த, 29ம் தேதி, 22 வயது இளம்பெண்ணை கடத்தி, இரண்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அந்த பெண் உயிரிழந்தார். இதில் குற்றவாளிகளாக கருதப்படும், ஷாஹித் மற்றும் சாஹில் என்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.
பல்ராம்பூர் சம்பவம் குறித்து காங்., தலைவர் ராகுல் கூறியதாவது:உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்கின்றன. பெண் குழந்தைகளை காப்போம் என்பது பா.ஜ.,வின் முழக்கம் அல்ல; உண்மைகளை மறைப்போம், ஆட்சியைக் காப்போம் என்பது தான் கோஷம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE