புதுடில்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து ராணுவ அமைச்சருர் ராஜ்நாத் சிங் நேற்று கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களை பாதுகாக்கும். ஒப்பந்த விவசாயம் என்ற பேரில் விவசாயிகளின் நிலத்தை யாராலும் உரிமைக் கோர முடியாது என்பதை உறுதியளிக்கிறேன். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும் அந்த விலை வரும் ஆண்டுகளில் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

படை பிரிவுகள் மறுசீரமைப்பு
ஐ.டி.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தரன்ஜித் சிங் நேற்று கூறியதாவது:முப்படை தலைமை தளபதி நியமிக்கப்பட்டதில் இருந்து செயல்பாடுகள் தளவாடங்கள் பயிற்சி பொதுவான தொடர்பு உள்ளிட்டவற்றை இணைக்க பல முயற்சிகள் எடுத்துள்ளோம். வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு பாதுகாப்புப் படைகளை மறுசீரமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE