சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?: கமல் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?: கமல் கேள்வி

Added : அக் 02, 2020 | கருத்துகள் (53)
Share
சென்னை: 'கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று(அக்.,2) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான விதிமுறைகள்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த
Makkal Needhi Maiam, Kamal, Kamal Haasan, MAIAM, கமல், கமல்ஹாசன்

சென்னை: 'கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று(அக்.,2) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான விதிமுறைகள்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுதும் இன்று கிராம சபைக் கூட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது.


latest tamil news



கிராமசபை கூட்டம் ரத்து குறித்து, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: ''கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? '' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X