சென்னை : ''கொரோனா நெருக்கடி காரணமாக, கட்சி துவங்குவது பற்றி, நடிகர் ரஜினி இப்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார்,'' என, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறினார்.
அவரது பேட்டி: விரைவில், தமிழக காங்கிரஸ் தலைவராக, கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்படுவார். கொரோனா நெருக்கடி காரணமாக, ரஜினி, அரசியல் கட்சி துவக்குவது பற்றி, இப்போது எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்.அவர், அரசியல் கட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி துவங்குவது பற்றி, ரஜினி தான் கூறுவார். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

தி.மு.க.,வில் மாவட்டத்திற்கு மாவட்டம் கோஷ்டிகள் உள்ளன. உதயநிதி பலம் வாய்ந்த சக்தியாக திகழ்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE