பொது செய்தி

இந்தியா

விவசாயியும் தர்மயுத்தம் நடத்தியவரும் மோதிக்கொண்டால் புதிய விவசாயி ஆட்சிக்கு வருவார்...

Updated : அக் 02, 2020 | Added : அக் 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம். பச்சை நிற துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியுமா; இன்று, சேற்றை மிதித்தவர் எல்லாம், விவசாயி ஆகிவிட முடியுமா? - அமைச்சர் சண்முகம்.'விவசாயியும், தர்மயுத்தம் நடத்தியவரும் மோதிக் கொண்டால், புதிய விவசாயி தான், ஆட்சிக்கு வருவார்...' என, சூசகமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக சட்டத் துறை
விவசாயியும் தர்மயுத்தம் நடத்தியவரும் மோதிக்கொண்டால் புதிய விவசாயி ஆட்சிக்கு வருவார்...

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம். பச்சை நிற துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியுமா; இன்று, சேற்றை மிதித்தவர் எல்லாம், விவசாயி ஆகிவிட முடியுமா? - அமைச்சர் சண்முகம்.


'விவசாயியும், தர்மயுத்தம் நடத்தியவரும் மோதிக் கொண்டால், புதிய விவசாயி தான், ஆட்சிக்கு வருவார்...' என, சூசகமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம் பேட்டி.



பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இணைந்து செயல்படுகின்றன. ஜெ., விரும்பிய கட்சி, பா.ஜ., இனி அமையும் அமைச்சரவையில், பா.ஜ., அங்கம் வகிக்கும் - பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.


'இரட்டை குழல் துப்பாக்கியில், ஒவ்வொரு தோட்டாவும், வெவ்வேறு திசைகளில் பாய்கின்றனவே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.



அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு, ௨௮ ஆண்டுகள் கழித்து, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து, தீர்ப்பு அளித்திருக்கிறது. இது, மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.


'நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தால், அவதுாறு வழக்கு பாயும்...' என, எச்சரிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.



குடும்ப உறுப்பினரான, நடிகை நயன்தாராவுக்கு கூட, தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில், 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும்? இதுவொரு ஏமாற்று வேலை; அனைத்து பெருமையும் பிரசாந்த் கிஷோருக்கே சேரும் - தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்.


latest tamil news





'அ.தி.மு.க.,வும் போட்டிக்கு, உறுப்பினர் சேர்க்கையில் ஏன் ஈடுபடவில்லை; கட்சி, ஒற்றுமையாக இல்லை என்பது தான் காரணமா...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.



60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரசும், 25 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.,வும், விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை.எனினும், வடிகட்டிய பொய்களை சொல்லி, விவசாயிகளை திசை திருப்பப் பார்க்கின்றன - பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ்.


'மத்திய பா.ஜ., அரசு நல்லது தான் செய்தாலும், பக்குவமாக செய்யத் தவறி விடுகிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேட்டி.



மன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று, தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது - ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.


'தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, பல நாடுகளை வென்ற தமிழ் மன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை கிடையாது. 'சிலருக்கு' ஊர் தோறும் சிலை உள்ளது. அது எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
02-அக்-202011:43:20 IST Report Abuse
Ravi Chandran தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, பல நாடுகளை வென்ற தமிழ் மன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை கிடையாது. 'சிலருக்கு' ஊர் தோறும் சிலை உள்ளது. அது எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி - இதைத்தானே சீமான் அப்போ இருந்தே சொல்லி வருகிறார். சீமான் மிகச்சிறந்த முதல்வராவார்
Rate this:
ஸ்டீவ் ராஜ், மங்களூர்சைமன் ராஜராஜ சோழனை கிருத்துவமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார் என்பதும் எங்களுக்கு தெரியும்....
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02-அக்-202011:08:30 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\மத்திய பா.ஜ., அரசு நல்லது தான் செய்தாலும், பக்குவமாக செய்யத் தவறி விடுகிறதே...........\\ ........... தமிழர்கள் மிக நன்கு படித்தவர்கள்தானே ........ புரிந்துகொள்வதில் என்ன பிரச்சினை இருக்கும் என்று நினைத்திருக்கலாம் .........
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02-அக்-202011:06:59 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\குடும்ப உறுப்பினரான, நடிகை நயன்தாராவுக்கு கூட, தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கலாம்..........\\........ தமிழக அரசியல்வாதிகள் (யார் வேணுமானாலும் மந்திரி ஆகலாம்..... அது ஒரு தகுதியே அல்ல) எப்போது கண்ணியமாக பேச கற்றுக்கொள்ளப்போகிறார்கள்? நயன்தாரா இங்கே எங்கு வந்தார்? இவருடைய கருத்து அருவருப்பானது .......... எல்லாம் ஒரே, மரியாதை தெரியாத, திராவிட கும்பலில் இருந்து வந்தவர்கள்தானே ?
Rate this:
02-அக்-202014:00:34 IST Report Abuse
chandran, pudhucherry தெரியாதா நோக்கு. அப்பப்ப நயன் குடும்பத்தில் ஒருத்தனுக்கு உறுப்பு இனர் ஆவார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X