யாருக்கும் அஞ்சமாட்டேன்: ராகுல் டுவிட்

Updated : அக் 02, 2020 | Added : அக் 02, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., எம்.பி., ராகுல், ‛உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழா இன்று (அக்.,02) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
MahatmaGandhi, GandhiJayanti, Rahul, Congress, மகாத்மா காந்தி, காந்தி ஜெயந்தி, ராகுல், டுவிட், அஞ்ச மாட்டேன்

புதுடில்லி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்., எம்.பி., ராகுல், ‛உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழா இன்று (அக்.,02) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்., எம்.பி., ராகுல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:


latest tamil news


உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையால் வெல்வேன்; பொய்களை எதிர்க்கும்போது வரும் எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும். காந்தி ஜெயந்தி வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ராகுல், பிரியங்கா மீது வழக்கு


இதனிடையே, உ.பி., மாநிலம் ஹத்ராஸில் 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் சென்றனர். ஆனால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக சென்ற ராகுல், பிரியங்கா சென்ற காரை அதிகாரிகள் மற்றும் போலீசார் மறித்தனர்.
அவர்களுடன் ராகுல், பிரியங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடக்க துவங்கினர். அப்போது ராகுல் தொடர்ந்து நடக்காத வகையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ராகுலை போலீசார் தள்ளிவிட்டனர். இதில், ராகுல் கீழே விழுந்தார். அதன் பின்னர், ராகுல், பிரியங்காவை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில், ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 200 காங்கிரஸ் தொண்டர்கள் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 188(அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்), பிரிவு 269(மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நோயை பரப்புதல்), பிரிவு 270 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில பெண் போலீசார் காயமடைந்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் சீரூடை கிழிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
02-அக்-202022:16:30 IST Report Abuse
madhavan rajan உடனடியாக இவரை லடாக் எல்லைக்கு அனுப்பி சீன வீரர்களை எதிர்க்கச் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவர் யாருக்கும் அஞ்சாதவர்.
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
02-அக்-202022:07:22 IST Report Abuse
SENTHIL அந்த காந்தி அப்படி இருந்து நல்ல பேர் எடுத்தார். இந்த காந்தி இப்படி இருந்து தொடப்பக்கட்டை கூட திட்டுமளவுக்கு உள்ளார்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-அக்-202020:46:04 IST Report Abuse
RajanRajan சூழ்நிலைகளை கட்டி காத்து பிரச்சினைகளை ஆதார பூர்வமாய் பொறுமையுடன் கையாண்டு வெற்றிக்கு வழிதேடும் மேலாண்மை திறன் இல்லாத ஒரு சக்கைப்பழம் இந்திய பிரதமராகணும்ன்னு நினைப்பது ஏவுளவு பெரிய தவறு என்பதை கூட உணர தெரியாத பப்பு கட்சி அதுக்கு தலைமை ஒரு இத்தாலிய அன்னை கூடவே ஒரு கிங்க்பின் சங்கு வேற. இப்படி ஒரு கட்சி இந்த தேசத்திற்கு தேவையா என்பதை சிந்தியுங்கள் மக்களே உசார் உசார். நம் சந்ததிகளை இந்த சாதிக்காரர்களிடம் இருந்து காப்பாத்த வேண்டும் வந்தே மாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X