போராட்டம் வெற்றி பெறும்: சோனியா நம்பிக்கை

Updated : அக் 02, 2020 | Added : அக் 02, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: விவசாய மசோதாவிற்கு எதிரான காங்கிரசின் போராட்டம் வெற்றி பெறும் எனக்கூறியுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, விவசாயிகள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள் எனக்கூறியுள்ளார்.மஹாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: மஹாத்மா காந்தி, தொழிலாளர்கள், உழைக்கும்
mahatmagandhi, farmers, congress, cong, sonia, soniagandhi, congresschief, congchief, modi,farmerbill,  modigovernment, punjab, rahul, rahulgandhi, workers, agation, lalbahadursastri, காங்கிரஸ், காங், சோனியா, சோனியாகாந்தி, காங்கிரஸ்தலைவர் சோனியா, விவசாயிகள், விவசாயிகள்மசோதா, தொண்டர்கள், போராட்டம், ராகுல், ராகுல்காந்தி, நம்பிக்கை,

புதுடில்லி: விவசாய மசோதாவிற்கு எதிரான காங்கிரசின் போராட்டம் வெற்றி பெறும் எனக்கூறியுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, விவசாயிகள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள் எனக்கூறியுள்ளார்.

மஹாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: மஹாத்மா காந்தி, தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளின் மிகப்பெரிய ஆதரவாளர். ‛ஜெய் ஜவான், ஜெய் கிஷான் ' என்ற கோஷத்தை முன்மொழிந்தவர் லால்பகதூர் சாஸ்திரி. கிராமங்கள் மற்றும் வயல்களில் தான் இந்தியாவின் ஆன்மா உள்ளதாக மஹாத்மா காந்தி கூறுவார். விவசாயிகளுக்கு எதிரான 3 கறுப்பு மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் ரோட்டில் போராடி வருகின்றனர்.

நாட்டிற்காக உணவு தானியங்களை அறுவடை செய்த போதிலும், மோடி அரசானது, விவசாயிகளை ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் கொண்டு வரும் போதெல்லாம், பொது மக்களின் கருத்துகளை கேகும். அந்த சட்டத்தை அமல்படுத்தும்போது, மக்கள் நலனை கருத்தில் கொள்ளும். நாட்டின் ஒவ்வொரு முடிவுக்கும், நாட்டு மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது ஜனநாயகம் ஆகும்.ஆனால், மோடி இதில் நம்பிக்கை கொண்டுள்ளாரா?


latest tamil newsவிவசாய மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். ஒவ்வொரு அரசியல் சட்டசபை தொகுதியிலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள. விவசாயிகள் மற்றும் காங்கிரசாரின் போராட்டம் வெற்றி பெறும் என்பதை நம்பிக்கையுடன் கூறுகிறேன். விவசாயிகள் வெற்றி பெறுவார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில், அனைவரும் அரசிடம் இருந்து இலவச உணவு தானியத்தை எதிர்பார்த்தனர். ஆனால், விவசாய சகோதரர்களின் உதவி இல்லாமல் சாத்தியமாகுமா? இன்று, நமது ஏழை விவசாயிகளுக்கு பிரதமர் அநீதி இழைக்கிறார். விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட மசோதா குறித்து, விவசாயிகளிடம் ஆலோசிக்கவில்லை. அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை. விவசாய மசோதாவை கொண்டு வருவதற்கு முன்னர் விவசாயிகளுடன் ஆலோசிக்காமல், அவரின் குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டுமே பேசினார்.

பார்லிமென்டில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னர், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தாததால், அவர்கள் தெருவில் இறங்கி போராடுகின்றனர். அவர்களின் குரல்களை கேட்காத ஜனநாயக விரோத , மக்கள் விரோத அரசு, அவர்களை லத்தியால் அடிக்கிறது. நமது விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். உணவுதானிய சந்தைகள் அழிக்கப்பட்டால், உணவு பொருட்களை பதுக்க, பதுக்கல்காரர்களுக்கு எளிதாகும். விவசாய நிலங்கள் கார்ப்பரேட் வசம் செல்லும். பிறகு, சிறிய விவசாயிகளை யார் காப்பாற்றுவார்கள். உணவு தானிய சந்தையில் பணியாற்றும் சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்களின் உரிமையை யார் காப்பாற்றுவது. இதனைபற்றி மத்திய அரசு சிந்தனை செய்ததா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ராகுல் பேரணி


இதனிடையே, விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபில் இருந்து டில்லியை நோக்கி அக்., 3 முதல் 5ம் தேதி வரை ராகுல் தலைமையில் டிராக்டர் பேரணி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
03-அக்-202001:07:24 IST Report Abuse
Dr.C.S.Rangarajan உள்ளம் ஆமையாய்   இருந்திருந்தால் 'நாவடக்கம் ' அறிவுறுத்ததக்கதாய் இல்லாதுபோய் இருக்கும். மனதில் மீதமொன்றுமில்லாது சொல்லில் வருவதனைத்தும் மனதுக்கு வடிகால் ஆனாலும் விளையும் இடறுகல் நம்மை இடறவைக்காமலா விட்டுவிடும் ? உள்ளன்புடன் கூறும் இனிய சொல்லே அறமெனும்போது, இன்சொல்லுக்கு 'வாய் முடக்கம்' செய்து கடும்சொற்களே கூறும் ஒருவர் தலைமை தங்கினாலும் பழத்தை நழுவவிட்டு காயுடனாவது  வருவாரா என்பதே ஐயப்படத்தக்கது. 
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
02-அக்-202022:17:53 IST Report Abuse
madhavan rajan எப்படி? 2019 இல் காங்கிரஸ் வெற்றி பெற்றதே அதுபோலவா?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-அக்-202020:20:53 IST Report Abuse
Rajagopal "கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி" என்று பாட ஆரம்பித்து விட்டார்கள். இது வரைக்கும் விவசாயிகள் இவர்கள் ஆட்சியில் கடன் பாரம் ஏறி தற்கொலை செய்து கொண்டது இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவர்கள் வாழ்வது ஆகாயக் கோட்டைகளில். விவசாயம் என்றால் கிலோ என்னவென்று கூட அறியாமல் வளர்ந்து, இப்போது அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் படியாக இயக்கப் பட்டிருக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார்களாம். பேசாமல், மோடி எது செய்தாலும் அதை எதிர்ப்போம் என்று அறிக்கை விட்டால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X