ரயில்வேயில் புதுமை
தெற்கு ரயில்வேயில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு அவர்களை எச்சரிக்கும் விதமாக சிறிய கருவியை ரயில்வே இன்ஜினியர் வடிவமைத்துள்ளார். இது சட்டை பாக்கெட், ஐ.டி., கார்டு, மணிபர்ஸ், கை கடிகாரம் போன்றவற்றில் அணிந்து கொள்ளலாம். இதன் எடை 30 கிராம். 'ரேடியோ அதிர்வெண்' தொழில்நுட்பம் மூலம் இக்கருவியை பொருத்திக் கொண்ட மற்றவர்கள் எவ்வளவு அருகில் இருக்கின்றனர் என அறிந்து, 12 அடி இடைவெளிக்கு குறைவாக ஒருவருக்கொருவர் வந்தால் எச்சரிக்கை செய்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு இது பயனுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
பொருத்தமான விருது
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டதறகாக இரண்டு நாட்டு தலைவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தான் அவை. இரு நாடுகளுக்கிடையே பல பிரச்னைகள் உள்ளன. இந்த இரு நாடுகளின் தலைவர்களுக்கு தான், 1994ல் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் மற்றும் அப்போது இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த சிமோன் பெரஸ் ஆகிய மூன்று பேருக்கு சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE