சென்னை : ''முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு, வரும், 7ம் தேதி வரை பொறுத்திருங்கள்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை, வேளச்சேரியில், 'சுப்ரீம் மொபைல்'ஸ் கிளையை, நேற்று அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சமூக இடைவெளி அடிப்படையில் நடத்தப்பட்டது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, நோய் தொற்று இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனாவை ஒழிக்க, அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் பரவக்கூடாது என்பதால், கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, கிராம சபை கூட்டம் நடக்காது என்பது தெரியும்; அவர் முரண்பாடானவர். சட்டசபை நடக்கும் போது, கூட்டம் வேண்டாம் என்றார். கூட்டம் நடக்காதபோது, கூட்டத்தை நடத்துங்கள் என்றார். கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படும் என்பது தெரிந்து, அறிக்கை விடுகிறார். கோவிலுக்கு ஓ.பி.எஸ்., செல்வதை அரசியலாக்காதீர்கள். வரும், 7ம் தேதி, முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். அதுவரை பொறுத்திருங்கள்; அடுத்த நாள் என்னிடம் கேளுங்கள்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.