மதுரை: மதுரையை பூர்விகமாக கொண்ட செங்கல்பட்டு ஐ.டி., நிறுனம் ஒன்றில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றும் நீச்சல்காரன் என்ற ராஜாராமன்தன் இணையதளத்தில் மலையாள மொழியை தமிழில் மொழிபெயர்க்கும் 'பேச்சி' என்ற செயலியை கண்டுபிடித்து சேர்த்துள்ளார்.
அவர் கூறியதாவது: நீச்சல்காரன் இணையதளத்தில் தமிழ் சந்திப்பிழை திருத்த 'நாவி', எழுத்து பிழை திருத்த 'வாணி' செயலிஉருவாக்கினேன். தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகளில் ஒருவராக கட்டுரைகள் எழுதுகிறேன். மலையாள கட்டுரைகளை காப்பி செய்து 'பேச்சி' செயலியில் பேஸ்ட் செய்தால் தமிழில் மொழி பெயர்க்கும்.
மலையாளம் புரிந்து, வாசிக்க தெரியாதவர்களுக்கு இது உதவும். கூடுதலாக ஹிந்தி வார்த்தைகளையும் தமிழில் எழுதும்.என் மொழிபெயர்ப்பு செயலியைவிட கூகுள் டிரான்ஸ் லேட்டர் சிறப்பு. ஆனால்மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு கூகுளில் வார்த்தை கட்டுப்பாடுகள் உண்டு. எனவே சுயசார்பு தொழில்நுட்பம் உருவாக்கும் தேவை ஏற்பட்டது. ஐரோப்பிய மொழிக்கு ஏற்ப அவர்கள் மொழிபெயர்ப்பு கருவி உள்ளதால் தென்னிந்திய மொழிகளுக்கு சரிவரவில்லை,
தமிழ், மலையாள இலக்கணப்படி 'பேச்சி' உருவாக்கினேன். 2000 அடி சொற்கள் கொண்ட மலையாள தமிழ் இணை சொல் அகராதியும் இணைத்துள்ளதால் எளிய மலையாள வாக்கியங்களை முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கும். தமிழில் உள்ள பல சொற்களின் மருவிய வடிவை மலையாளத்தில் இன்றும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
உலக மொழி பெயர்ப்பு தினத்தையொட்டி பேச்சி செயலியை காஞ்சிபுரம் ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சிவக்குமார், வலைதமிழ் நிறுவனர் பார்த்தசாரதி காணொலி வழி அறிமுகப்படுத்தினர்.
மேலும் அறிய http://apps.neechalkaran.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE