தி.மு.க., கூட்டணியில் மாற்றம்: துரைமுருகன்

Updated : அக் 03, 2020 | Added : அக் 03, 2020 | கருத்துகள் (27) | |
Advertisement
வேலுார் : ''தி.மு.க. கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது'' என துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே வண்டரந்தாங்கல் கிராமத்தில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. தி.மு.க. பொதுச் செயலரும் காட்பாடி எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் மக்களிடம் மனுக்கள் பெற்றார்.பின் அவர் அளித்த பேட்டி: முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது
DMK, திமுக, துரைமுருகன், கூட்டணி, மாற்றம்

வேலுார் : ''தி.மு.க. கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது'' என துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே வண்டரந்தாங்கல் கிராமத்தில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. தி.மு.க. பொதுச் செயலரும் காட்பாடி எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் மக்களிடம் மனுக்கள் பெற்றார்.

பின் அவர் அளித்த பேட்டி: முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிந்து விட்டது.இதனால் அரசின் கோப்புகளை இனி அதிகாரிகள் கிடப்பில் போட்டு விடுவர். அனைவரையும் இது பாதிக்கும்.


latest tamil news



தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எம்.எல்.ஏ. தேர்தலில் சீட்கள் போதவில்லை என வெளியேறுவர். அங்கே உள்ள சிலரும் தி.மு.க. கூட்டணிக்கு வருவர். இது சகஜம் தான். இதனால் தி.மு.க. கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
03-அக்-202018:31:27 IST Report Abuse
Poongavoor Raghupathy எலக்ஷன் கமிஷன் உடனே கூட்டணி தேர்தலை நிறுத்தவேண்டும். தனியாக நின்று வெற்றி பெற தகுதி பெற வேண்டும் இல்லையானால் எலக்ஷன் பிறகு ஆட்சி அமைக்க கூட்டணி உண்டு என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.இல்லையானால் பெரிய மீன் சின்ன மீனை ஏமாத்தும் .அதிமுக கட்சி அழிய பன்னீர் செல்வம் படு படுகிறார்.ஆசை யாரை விட்டது.தானும் அழிந்து கட்சியும் அழிய வழி வகுக்கிறார் பன்னிர்.ஆடு நனைகிறது திமுக துள்ளுகிறது.ரஜினி திமுகவுக்கு பாடம் புகட்டவேண்டும்.செய்வாரா பார்ப்போம்.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
03-அக்-202017:06:34 IST Report Abuse
Siva Kumar மக்கள் எதிர்பார்ப்பது திமுகவில் மாற்றம். சுடலை, அவர் மகன் அவங்க குடும்பம் மொத்தத்தையும் திமுகாவிலிருந்து வேறு கட்சிக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-அக்-202012:07:11 IST Report Abuse
Malick Rajaதமிழக மக்கள் 40.க்கு 39.இடங்களை கொடுத்தார்கள் அது எதற்கு ? ஆக எவ்வளவு தோல்விகளை தழுவிக்கொண்டே இருப்பினும் இல்லை ..வெற்றி வெட்டி .. என்று கூவி கூவியே ஆவியும் போகலாம் .....
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
03-அக்-202015:37:34 IST Report Abuse
Loganathaiyyan அப்பாடி ஏன்னா உயரிய நோக்கில் எதிர்பார்ப்பு இப்படித்தான் இருக்கணும் திரவிஷா கட்சியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X