சென்னை: மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மாணவர்களுக்கு ஹிந்தியில் இணைய வழி புதிர் போட்டி நடத்துவது கண்டனத்துக்கு உரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி, 150வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில்,3ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஹிந்தியில் இணைய வழி புதிர்போட்டி நடத்துவது கண்டனத்துக்குரியது. காந்தியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த அவரது கருத்துக்கள் ஆகியவற்றில் நடைபெறும் போட்டிக்கு, தமிழக மாணவர்களுக்கு, ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லை. இரு மொழி கொள்கையிலிருந்து, பின் வாங்கி, பதவி சுகத்தை அனுபவிக்கும் எஞ்சிய நாட்களில், ஹிந்தியை தமிழகத்தில் புகுத்தி, மும்மொழி திட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதை, முதல்வர் நிறுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE