முதியோருக்கு பலன்
அமெரிக்காவின் 'மாடர்னா' என்ற கொரோனா தடுப்பூசி, இளைஞர்களைப் போலவே, முதியோரிடம் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 56 - 70 வயதுக்குட்பட்ட 20 பேர், 70 வயதுக்கு மேல் 20 பேர் என 40 தன்னார்வலர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இருமுறை தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. பின் அவர்களை ஆய்வு செய்ததில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவானது கண்டறியப்பட்டது. 'மாடர்னா' தடுப்பூசி அமெரிக்க அரசின் அலர்ஜி, தொற்றுநோய் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
தகவல் சுரங்கம்
உலக விலங்குகள் தினம்
உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது, அவை வேட்டையாடப்படுவதை தடுப்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் 'பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1931ல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் தொடங்கப்பட்டது. விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப் படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE