உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு! | Dinamalar

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

Updated : அக் 05, 2020 | Added : அக் 03, 2020 | கருத்துகள் (7) | |
ரோங்டாங் : ஹிமாச்சல பிரதேசத்தில், மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டதன் வாயிலாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு நனவாகியுள்ளதாக, மோடி பேசினார்.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான,
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை 
அர்ப்பணிப்பு!

ரோங்டாங் : ஹிமாச்சல பிரதேசத்தில், மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்தார்.

இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டதன் வாயிலாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு நனவாகியுள்ளதாக, மோடி பேசினார்.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மணாலி - லே இடையே, 9.02 கி.மீ., துாரத்துக்கு, நெடுஞ்சாலை சுரங்கப்பாதை அமைக்க, 2002ல், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார்.
மறந்தனர்பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பின், சமீபத்தில் தான், இந்த சுரங்கப்பாதையின் கட்டுமான பணி நிறைவடைந்து, பயன்பாட்டுக்குதயாரானது. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலத்துக்கு நேற்று, பிரதமர் மோடி சென்றார். மணாலி - லே இடையே கட்டி முடிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பங்கேற்றார்.சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமர் மோடி பேசியதாவது:இந்த சுரங்கப்பாதைக்கு, அடல் பிஹாரி வாஜ்பாய், 2002ல் அடிக்கல் நாட்டினார். அதற்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த திட்டத்தை மறந்துவிட்டனர்.

கடந்த, 2014ல் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் வரை, இந்த திட்டத்தில், 1,300 மீட்டர் துாரத்துக்கு மட்டுமே பணிகள் நடந்திருந்தன. அந்த வேகத்திலேயே பணிகள் நடந்திருந்தால், 2040ல் தான், சுரங்கப்பாதை பணி முடிந்திருக்கும்.மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்த பின், இந்த திட்டம் வேகமெடுத்தது. ஆண்டுக்கு, 1,400 மீட்டர் துாரம் பணி முடிக்கப்பட்டு, தற்போதுதிறக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை திறந்து வைத்ததன் வாயிலாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு மட்டு மின்றி, ஹிமாச்சல் மக்களின் கனவும் நனவாகியுள்ளது. அதனால் தான் இந்த சுரங்கப்பாதைக்கு, வாஜ்பாயின் நினைவாக, 'அடல் சுரங்கப்பாதை' என, பெயரிடப்பட்டுள்ளது.


தேச பாதுகாப்புஇன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள், இந்த சுரங்கப்பாதை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என, கல்வி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கிறேன். மத்தியில், 2004 - 14 வரை நடந்த ஆட்சியில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட எல்லா பணிகளும் தாமதிக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம் இருந்தது என தெரியவில்லை.
ஆனால், பா.ஜ., ஆட்சியில், பாதுகாப்புத் துறைக்கும், நாட்டின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசத்தைப் பாதுகாப்பதை விட, எங்களுக்கு எதுவும் முக்கியம் இல்லை.
இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

உலகின் மீக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை என்ற பெருமை, இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ளது. இந்த புதிய சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதன் வாயிலாக, எல்லை பகுதியில் உள்ள ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை விரைவாக எடுத்துச் செல்ல முடியும்.ஹிமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்து, வேலைவாய்ப்பு பெருகுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லே - மணாலி இடையே குளிர்காலத்தில் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தந்தையின் ஆசை நிறைவேறியது!ஹிமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் கோபால். 1940களில் இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருந்தபோது, வாஜ்பாயுடன் நட்பு ஏற்பட்டது. கடந்த, 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரை அர்ஜுன் கோபால் சந்தித்தார். அப்போது, மணாலி - லே இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.
இதன் பின் தான், இந்த திட்டத்துக்கு, 2002ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2008ல் அர்ஜுன் கோபால் இறந்துவிட்டார். நேற்று நடந்த சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில், அவரது மகன்கள் அமர் சிங், ராம்தேவ் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:இந்த சுரங்கப்பாதை பற்றி, என் தந்தை நீண்ட காலமாக கூறி வந்தார். வாஜ்பாய் பிரதமரானதும், இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தார்.
சுரங்கப்பாதையை அவர் பார்க்க முடியாவிட்டாலும், எங்கள் தந்தையின் ஆசை நிறைவேறியுள்ளது; இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


சுரங்கப்பாதையின் சிறப்பு என்ன?* அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும், பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையின் நீளம், 9.02 கி.மீ.,
* கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில், இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது
* ஹிமாச்சல பிரதேசத்தில், ரோதாங் கணவாயின் கீழ், இமயமலையின் பிர் பஞ்சால் மலைத் தொடரை குடைந்து, இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது
* மொத்தம், 30 அடி அகலம், 17 அடி உயரத்துடன், இரண்டு வழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையால், மணாலி மற்றும் லே இடையேயான பயண துாரம், 46 கி.மீ., குறைகிறது. பயண நேரமும், நான்கு மணி நேரம் குறையும்
* ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், 3,300 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது
* குதிரையின் காலில் பொருத்தப்படும் லாடம் போன்ற வடிவத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது
* சுரங்கப்பாதையின் குறிப்பிட்ட இடைவெளிகளில், தீயணைப்பு குழாய், அவசர கால வழி, கண்காணிப்பு கேமராக்கள், சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன
* தினமும், 3,000 கார்கள் மற்றும் லாரிகள் இந்த பாதையில், மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் செல்லலாம்
* அதிநவீன, 'எலெக்ட்ரோ மெக்கானிக்கல்' நடைமுறைகளை உடையதாக, காற்றோட்ட வசதி, வெளிச்சம் உடையதாக, இந்த சுரங்கப்பாதை வடிவமைப்பட்டுள்ளது
* இதற்கு முன், மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில், 11 ஆயிரத்து, 63 அடி உயரத்தில், 5 கி.மீ., நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்ஜோப் சுரங்கப்பாதை தான், உலகின் நீளமான சுரங்கப் பாதையாக இருந்தது. தற்போது, அடல் சுரங்கப்பாதை, அந்த பெருமையை பெற்றுள்ளது.


ஹிமாச்சலின் சிறுவன்சமீபத்தில் நடந்த பார்லி., மழைக் கூட்டத் தொடரில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் பேசும்போது, நேரு - இந்திரா குடும்பத்தை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'நேரு - இந்திரா குடும்பத்தை பற்றி, ஹிமாச்சலின் சிறுவனுக்கு என்ன தெரியும்' என, கோபமாக கூறினார்.
இந்நிலையில், அடல் சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுராக் தாக்குரை, 'ஹிமாச்சலின் சிறுவன்' என, பிரதமர் மோடி அன்புடன் குறிப்பிட்டதை, மக்கள் வரவேற்றனர்.


'ஓட்டு வங்கி அரசியல் இல்லை'ஹிமாச்சலில், சோலால் வேலி, சிஸ்சூ ஆகிய இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில், பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், நாங்கள் தற்போது நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், வாக்குறுதிகளாக இடம் பெற்றிருந்தன. ஆனால், இப்போது அந்த சட்டங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது.
மத்திய அரசு என்ன செய்தாலும், அதை எதிர்ப்பது, பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த கட்சியின் வழக்கமாகி விட்டது. அதனால் தான், தேர்தல் அறிக்கையில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை கூட, இப்போது எதிர்க்கிறது. நாங்கள் ஓட்டு வங்கியை மனதில் வைத்து, எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதில்லை. அனைவருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே திட்டங்களை நிறைவேற்றுகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X