பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம்: முடிவில் மாற்றம் வருமா?

Updated : அக் 05, 2020 | Added : அக் 03, 2020 | கருத்துகள் (14) | |
Advertisement
பெரியகுளம்: தேனி, பெரியகுளம், கைலாசபட்டி பண்ணை வீட்டில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். அவர்களிடம், 'கட்சி நலன் கருதி, நல்ல முடிவு எடுக்கப்படும்' என, பன்னீர்செல்வம் கூறியுள்ளதால், அவரது முடிவில் மாற்றம் வரும் என, தெரிகிறது.வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர்
பண்ணை வீடு, ஓ.பன்னீர்செல்வம்

பெரியகுளம்: தேனி, பெரியகுளம், கைலாசபட்டி பண்ணை வீட்டில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். அவர்களிடம், 'கட்சி நலன் கருதி, நல்ல முடிவு எடுக்கப்படும்' என, பன்னீர்செல்வம் கூறியுள்ளதால், அவரது முடிவில் மாற்றம் வரும் என, தெரிகிறது.



வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது. 'வரும், 7 ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்' என, அக்கட்சி அறிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் நேற்று முன்தினம்(அக்.,2) இரவு, பெரியகுளம் வந்தார்.



நேற்று(அக்., 3) காலை, கைலாசபட்டி பண்ணை வீட்டில் இருந்த அவரை, தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன் ஆகியோர் சந்தித்து பேசினர். பின், சென்னை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, திருவாரூர் உட்பட, பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் சந்தித்து பேசினர். அப்போது, 'ஜெ.,வால் அடையாளம் காட்டப்பட்ட நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியதாக, பன்னீர் ஆதரவாளர்கள் கூறினர்.

அவர்கள் கூறியதாவது:

இக்கட்டான சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்தார். இவரை, 'விசுவாச முதல்வர்' என, ஜெ., பாராட்டினார். இது, கட்சி தலைமை நிர்வாகி முதல், கடைசி தொண்டர் வரை தெரியும்.
அ.தி.மு.க., மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்க, நீங்கள் முதல்வர் வேட்பாளராக வேண்டும். கட்சி வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என, அவரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர், 'கட்சியின் நலன் கருதி, நல்ல முடிவு எடுக்கப்படும்' என தெரிவித்தார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கட்சி நலன் கருதி முடிவு எடுக்கப் போவதாக, பன்னீர் கூறியிருப்பதால், அ.தி.மு.க.,வில் பிளவையோ, பிரச்னையையோ, அவர் ஏற்படுத்தப் போவதில்லை என, தெரிகிறது. எனவே, அவரது முடிவில், 7ம் தேதிக்குள் மாற்றம் வரலாம் என, கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
04-அக்-202018:18:14 IST Report Abuse
Poongavoor Raghupathy எடப்பாடி வல்லவர் நல்லவரும் கூட, கட்சியை ஆட்சியை இதுவரை திறமையாக நடத்தி வந்தார். இனிமேல் அம்மாவின் கட்சி தேறி வருவது கடினம், ஸ்டாலின் இதற்குத்தான் காத்திருந்தார். ரஜினி ஒருவரால்தான் திராவிட முதலைகள் இடமிருந்து தமிழகத்தியும் மக்களையும் காப்பாற்ற முடியும்.ரஜினி அரசியலுக்கு வரவில்லையானால் திராவிட முதலைகள் தமிழகத்தை சூறை ஆடி விடுவார்கள்..
Rate this:
04-அக்-202019:43:27 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்இதுபோன கபாசுரக்குடி நீர் கொடுக்க 9000 கோடி ஆனால் உன் பார்வையில் வல்லவர் நல்லவர் சூப்பர் இதற்காகவே இன்னும் ஊரடங்கை நீடித்து கொண்டே இருக்கிறார்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-அக்-202015:20:19 IST Report Abuse
sankaseshan ஆனந்த் சரியான யோசனை சொல்லி உள்ளார் பத்மராஜ ஐயர் பேரை மாற்றி கொள்ளலாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்ஜோய் .
Rate this:
Cancel
POORMAN - ERODE,இந்தியா
04-அக்-202014:20:42 IST Report Abuse
POORMAN கட்சியின் நலன் கருதி நல்ல முடிவு. எடுக்கலைன்னா அடுத்த பொதுக் குழு கூட்டத்துல தீர்மானம் நிறைவேற்றி பன்னீரை தூக்கி இருப்பாரு எடப்பாடி. பன்னீர் நம்பி இன்றைய தேதிக்கு பேருக்கு கூட இரண்டு MLA போகமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X