வாசிப்பே சுவாசிப்பு : அதை ஒரு போதும் நிறுத்தி விடக்கூடாது

Updated : அக் 04, 2020 | Added : அக் 03, 2020
Share
Advertisement
''சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களை தேடி படிக்க வேண்டும். அப்போதுதான் பிறமொழி படைப்புகளின் தரத்தையும், அதன் சமகால போக்கையும் நாம் அறிந்து கொள்ள முடியும்,'' என்கிறார், கவிஞர் புவியரசு.கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தை சேர்ந்த மூத்த கவிஞர் புவியரசு. தன் சுய படைப்புகளுக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர்.இவரது, 90வது பிறந்தநாளை
 வாசிப்பே சுவாசிப்பு  : அதை ஒரு போதும் நிறுத்தி விடக்கூடாது

''சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களை தேடி படிக்க வேண்டும். அப்போதுதான் பிறமொழி படைப்புகளின் தரத்தையும், அதன் சமகால போக்கையும் நாம் அறிந்து கொள்ள முடியும்,'' என்கிறார், கவிஞர் புவியரசு.கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தை சேர்ந்த மூத்த கவிஞர் புவியரசு. தன் சுய படைப்புகளுக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர்.இவரது, 90வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின், மாவட்ட செயலாளர் ரமணி தலைமை வகித்தார்.தமிழ் படைப்பிலக்கிய தளத்தில், புவியரசின் இலக்கிய பங்களிப்பு குறித்தும், அவரது கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு நுால்கள் குறித்தும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் மதிப்புரை வழங்கினர்.ஏற்புரையில் கவிஞர் புவியரசு பேசுகையில், ''மனிதர்கள் இன்றைக்கு பிரிந்து இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் நெருங்குவதில்லை. காலம் நம்மை பிரித்து விட்டது. காலம் பிரித்தாலும், இலக்கியம் நம்மை இங்கு இணைத்து இருக்கிறது.எந்த சூழ்நிலையிலும், புத்தக வாசிப்பை நிறுத்தி விடக்கூடாது.
சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அப்போதுதான் பிறமொழி படைப்புகளின் தரத்தையும், அதன் சமகால போக்கையும், நாம் அறிந்து கொள்ள முடியும். படைப்பாளிகள் தங்கள் கருத்தை படைப்பின் வழியாக துணிச்சலுடன் சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பாளியின் கடமை,'' என்றார்.''எந்த சூழ்நிலையிலும், புத்தக வாசிப்பை நிறுத்தி விடக்கூடாது. சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அப்போதுதான் பிறமொழி படைப்புகளின் தரத்தையும், அதன் சமகால போக்கையும், நாம் அறிந்து கொள்ள முடியும்''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X