டிரம்ப் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது உண்மை: வெள்ளை மாளிகை

Updated : அக் 04, 2020 | Added : அக் 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா தொற்றால் ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் வெளியான தகவலை விடவும் அவர் நிலைமை மோசமாக இருந்ததாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மேடோஸ் கூறியுள்ளார்.74 வயதாகும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நவ., 4-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மனைவி
Donald Trump,Trump,White House,Covid19, corona virus, டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் வெளியான தகவலை விடவும் அவர் நிலைமை மோசமாக இருந்ததாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மேடோஸ் கூறியுள்ளார்.

74 வயதாகும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நவ., 4-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர், வெள்ளிக்கிழமை ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லேசான காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.


latest tamil news



இந்நிலையில் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மேடோஸ் பாக்ஸ் நியூசிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வெள்ளிக்கிழமை ஊடகங்களில் வெளியான தகவலை விடவும் டிரம்ப் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரது இரத்த ஆக்ஸிஜன் அளவு வேகமாக வீழ்ச்சியடைந்தது. அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இப்போது அவருக்கு காய்ச்சல் இல்லை. இதனை மிகப்பெரிய விஷயமாக கருதுகிறோம். ஆக்ஸிஜன் செறிவு அளவு சிறப்பாக உள்ளது. நேற்று காலை நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். ஆனாலும் டிரம்ப் வழக்கமான பாணியில் நடந்து கொண்டிருந்தார். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202004:43:37 IST Report Abuse
Mani . V இந்தியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்ற நாடகங்கள் அரங்கேறும். அது இப்பொழுது அமெரிக்கா வரை வியாதி போன்று பரவி விட்டது. ஒரு வேளை நம்ம ஆளு இந்த ஐடியாவை கொடுத்திருப்பாரோ?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202003:36:10 IST Report Abuse
J.V. Iyer ட்ரம்ப் மட்டுமல்ல, அவரின் வெற்றியும் தேவை உலகம் அமைதிக்கு மீள. குறிப்பாக கிழக்கு ஆசியாவில்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-அக்-202001:29:59 IST Report Abuse
தமிழவேல் திங்கள் கிழமையே ஒயிட் ஹவுஸுக்கு வர்றாராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X