வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம்: டிராக்டர் பேரணியில் ராகுல் ஆவேசம்

Updated : அக் 06, 2020 | Added : அக் 04, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
மோகா:''மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்,'' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல் பேசினார். பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையே, விவசாய துறையை
Congress, Rahul, tractor rally, Agriculture Bill 2020, வேளாண் சட்டம்,ரத்து செய்வோம்,டிராக்டர் பேரணி,ராகுல், ஆவேசம்

மோகா:''மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்,'' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல் பேசினார்.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையே, விவசாய துறையை பாதுகாக்கவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், டிராக்டர் பேரணி நடத்த, காங்., முன்னாள் தலைவர் ராகுல் திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி, இந்த இரு மாநிலங்களிலும், 50 கி.மீ., வரை டிராக்டரில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், பஞ்சாபின் மோகா மாவட்டத்திற்கு வந்த ராகுல், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை துவங்கினார். இதில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநில காங்., தலைவர் சுனில் ஜாக்கர், மாநில நிதி அமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,யுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணியில் ராகுல் பேசியதாவது: இந்தியாவின் முதுகெலும்பாக, விவசாயிகள் விளங்குகின்றனர்.குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமல், விவசாயிகளால் வாழ இயலாது; இதை மத்திய அரசு உணர வேண்டும்.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது, உணவு கொள்முதல் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளை ஒழிப்பதே, மத்திய பா.ஜ., அரசின் இலக்காக உள்ளது.

இந்த விவகாரத்தில், நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நாங்கள்தொடர்ந்து போராடு வோம். நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கருப்புச்சட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த சட்டங்கள் குப்பைத் தொட்டியில் போடப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
05-அக்-202018:14:05 IST Report Abuse
Biil Brace நவாப் நாற்காலியில் அமர்ந்து போராட்டம் செய்வது பார்க்க கண் கொள்ளா காட்சி அப்படியே குளிர் சாதன வசதி பண்ணிடுங்கள்
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-202017:19:14 IST Report Abuse
Saravanan மஹாராஷ்ட்ராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் அப்போ எங்கே போனார்கள் இந்த கூமுட்டைகள், தமிழ்நாட்டில் காவிரி தண்ணீர் பிஜேபி கொடுத்துவிடும் எனவே பிஜேபிக்கு வோட்டு போடாதீர்கள் என இதே பப்பு சொன்னான் அப்போ எங்கே போனது விவசாயிகள் மீதான பாசம், இந்த வெத்துவேட்டு பேச்சு கேட்டுகிட்டு ஆட்டம் போடும் டாஸ்மாக் தமிழர்களை அந்த ஆண்டவனால் காப்பாற்ற முடியாது
Rate this:
Cancel
05-அக்-202015:36:40 IST Report Abuse
Sridhar Sambandham 1,ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதற்காக கொண்டு வரப்பட்டது? விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை வெளிச்சந்தையில், மிகவும் விலை குறைவாக வியாபாரிகள் வாங்குவதை தடுப்பதற்காக, அப்படி இருக்கையில் ஏன் வெளிச்சத்தையும் மீண்டும் திறந்து விட வேண்டும்!!!! 2,அத்தியாவசியப் பொருட்கள் தடுப்புச் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது? வியாபாரிகள் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து செயற்கையாக விலையேற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதற்காக , அப்படியிருக்கையில் இந்த சட்டம் இப்ப யாருக்காக திருத்தப்பட்டுள்ளது !! 3,விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நாட்டில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம்!நான் ஒரு விவசாயி என்ற முறையில் ,எனக்குத் தெரிந்த வரையிலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்ததாக நான் இதுவரையிலும் கண்டதில்லை நடக்கப் போவதுமில்லை அப்படி இருக்கையில் இந்த சட்டம் யாருக்காக????
Rate this:
blocked user - blocked,மயோட்
05-அக்-202020:13:15 IST Report Abuse
blocked userஇந்தத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்ததால்த்தான் விவசாயிக்கு இன்றுவரை ஞாயமான வருமானம் கிடைப்பது கிடையாது. வருடம் முழுவதும் உழைத்தும் லாபம் இல்லை - ஆனால் இடைத்தரகர்கள் புகுந்து விலையை ஐந்து மடங்கானது ஏற்றி விடுகிறார்கள். முதலீடுகள் வந்தால் மூலப்பொருள் அதிக மதிப்புள்ள பொருளாகும் பொழுது நிச்சயம் விவசாயிக்கு ஞாயமான விலை கிடைக்கும். உதாரணத்துக்கு கம்போஸ்ட்க்கு போடும் தக்காளியை சாசாக மாற்றி விற்றால் விவசாயிக்கு நல்ல வருமானம் வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X