தாடியின் பின்னணி என்ன?

Updated : அக் 06, 2020 | Added : அக் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஊரடங்கு துவங்கிய பின், நாடு முழுதும் பலர் தாடி வளர்த்தனர்; இவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். இப்படி தாடி வளர்த்த பலர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், தாடியை எடுத்து விட்டனர்; ஆனால் மோடியின் தாடி, நீண்டு கொண்டே போகிறது. ஊரடங்கில் மற்றவர்களைப் போல், தானும் தாடியுடன் இருப்பதாக பிரதமர் காட்டிக் கொண்டாலும், விஷயம் அதுவல்ல என்கின்றனர் அதிகாரிகள். பிரதமர் வீட்டில்

ஊரடங்கு துவங்கிய பின், நாடு முழுதும் பலர் தாடி வளர்த்தனர்; இவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். இப்படி தாடி வளர்த்த பலர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், தாடியை எடுத்து விட்டனர்; ஆனால் மோடியின் தாடி, நீண்டு கொண்டே போகிறது.latest tamil news
ஊரடங்கில் மற்றவர்களைப் போல், தானும் தாடியுடன் இருப்பதாக பிரதமர் காட்டிக் கொண்டாலும், விஷயம் அதுவல்ல என்கின்றனர் அதிகாரிகள். பிரதமர் வீட்டில் அனைத்து வசதிகளும் உண்டு. மோடிக்கு முடி திருத்தம் செய்வதற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், பிரதமர் வீட்டிலேயே இருக்கின்றனர். கொரோனாவிலிருந்து பிரதமரைப் பாதுகாக்க, முடி திருத்துபவர்களை, பிரதமரை நெருங்க அனுமதி அளிக்கவில்லை, பாதுகாப்பு அதிகாரிகள்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கவுள்ளது. அங்கு, பா.ஜ., அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் தேசியக் கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இதனால், ரவீந்திரநாத் தாகூர் போல், நீண்ட தாடியுடன் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காகவே, மோடி, இப்படி தாடி வளர்க்கிறார் என்கின்றனர், அதிகாரிகள்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ராகுலை முந்தும் பிரியங்கா!


டில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.விரைவில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு சென்று, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்து உள்ளார்.

வரும், 2022ல், உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே, அங்கு அவர் முகாமிட முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.தற்போது, உத்தர பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் கொதித்தெழுந்த பிரியங்கா, மாநில அரசுக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் குதித்துஉள்ளார்.

பிரியங்கா களத்தில் இறங்கியதும், அவருடன் ராகுலும் சேர்ந்து கொண்டார். மாநில அரசுக்கு எதிராக, தினமும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார் பிரியங்கா. மற்ற எதிர்க்கட்சிகளும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 'மேடம், ராகுலையே முந்திவிட்டார்; இவரை வைத்து தான் இனி அரசியல் நடத்த வேண்டும். காங்கிரஸ் பிழைக்க இது தான் வழி' என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.


நிதி அமைச்சர் பற்றிய வதந்தி!


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமை யாக உழைத்தாலும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார். 'இந்திய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி போவதற்கு நிதி அமைச்சர் தான் காரணம்' என, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பா.ஜ.,வுக்குள்ளும், அவருக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால், பியுஷ் கோயலுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும், அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், 'நிர்மலா சீதாராமனை, பிரதமர் மாற்ற மாட்டார்; அவர் நிதி அமைச்சராகவே தொடர்வார். பிரதமர் மோடியின் ஆலோசனையின் படியே, நிர்மலா சீதாராமன் செயல்படுகிறார். எனவே, இதெல்லாம் வெறும் வதந்தி தான்' என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் மீது, பிரதமர் மோடிக்கு மதிப்பும் மரியாதையும் பெருமளவு உயர்ந்துள்ளது என சொல்லப்படுகிறது.விவசாயிகள் மசோதா மற்றும் சீன பிரச்னையை, ராஜ்நாத் சிங் பார்லிமெண்டில் கையாண்ட விதம் ஆகியவற்றை, பிரதமர் பாராட்டியுள்ளார்.'எப்போது மத்திய அமைச்சரவை மாற்றம் நடந்தாலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. இந்த மூவரும், பிரதமருக்கு நெருக்கமானவர்கள்' என்கின்றனர், கட்சியின் முக்கிய பிரமுகர்கள்.


முருங்கை பரோட்டா!


பிரதமர் மோடியின் உணவு நடைமுறை மிகவும் எளிமையானது. சுத்தமான சைவ உணவுப் பிரியர். நவராத்திரி துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே, விரதம் இருக்க ஆரம்பித்து விடுவார்.

நவராத்திரி ஒன்பது நாட்கள்; அதற்கு முன் ஒரு வாரம், நவராத்திரிக்கு பின் ஒரு வாரம் என ஒரு மாதத்துக்கு கடும் விரதம் இருப்பார், பிரதமர். பிரதமர் மோடி, சமீபத்தில் தனக்கு பிடித்த உணவு வகைகளைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இவர் மிகவும் விரும்பி சாப்பிடுவது முருங்கை தான். காலிபிளவர் பரோட்டா, வெங்காய பரோட்டா என, பலவித பரோட்டாக்கள் வட மாநிலங்களில் உண்டு. நம்ம ஊர் போல மைதாவில் செய்யாமல், கோதுமையில் தான் பரோட்டா செய்வர். சிறு வயதில் இருந்தே, முருங்கைக் கீரை பரோட்டா சாப்பிட்டு வளர்ந்தவராம், மோடி. இப்போது, வாரத்தில் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது, முருங்கை பரோட்டா, மோடியின் உணவு பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டும்.

குஜராத்தி கிச்சடியையும் விரும்பி சாப்பிடுகிறார், மோடி. கிச்சடி என்பது, பொங்கல் மாதிரி இருக்கும். குஜராத் கிச்சடியில், பச்சைப் பயிறுடன் அரிசியும் சேர்த்து, குழைத்து வடிப்பர்; அதில் நெய் விட்டு சாப்பிட்டால் அமிர்தம் தான்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-202013:58:01 IST Report Abuse
R. SUBRAMANIAN ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் வரும்போது இந்த தாடி கூட பெரியாரை நினைவு படுத்தி ஒரு 60 தொகுதிகளில் வெற்றியை பெற்று தரலாம். யார் கண்டது?
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
12-அக்-202003:25:32 IST Report Abuse
NicoleThomsonஅதனால் தானோ என்னவோ உதயநிதியும் வளராத விஷயத்தை வளர்த்து வருகிறார் போல?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X