சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 04, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்சூரிய ஒளி மின்சாரம்இங்கிலாந்தில் உள்ள எசக்ஸ பகுதியில் செயல்படும் அமேசான் நிறுவன கட்டடத்தின் மேல் பகுதியில் ஐரோப்பாவின் பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11,500 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 700 குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்க முடியும். அமேசான் தனக்கு தேவையான மின்சாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 100

அறிவியல் ஆயிரம்
சூரிய ஒளி மின்சாரம்
இங்கிலாந்தில் உள்ள எசக்ஸ பகுதியில் செயல்படும் அமேசான் நிறுவன கட்டடத்தின் மேல் பகுதியில் ஐரோப்பாவின் பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11,500 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 700 குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்க முடியும். அமேசான் தனக்கு தேவையான மின்சாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (இயற்கை மின்சாரம்) முறையில் உற்பத்தி செய்து பயன்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக ஆசிரியர் தினம்
ஆசிரியர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் அக்., 5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா சூழலிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிக்கும் செயல் பாராட்டுக்குரியது.'ஆசிரியர்கள் : நெருக்கடியில் வழிநடத்துதல், எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் சிறந்த நபராக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X