டிரம்ப் விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவக் குழு நம்பிக்கை

Updated : அக் 05, 2020 | Added : அக் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலெனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனிமைபடுத்தப்பட்டனர். இந்நிலையில் டிரம்புக்கு காய்ச்சல்,

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



latest tamil news


அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலெனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனிமைபடுத்தப்பட்டனர். இந்நிலையில் டிரம்புக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவு குறைந்து காணப்பட்டதால் அவர் மேரிலேண்டின் பெட்ஹேஸ்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தற்போது காய்ச்சல் குணமடைந்துள்ளதாகவும், உடல் உள்ளுறுப்பு இயக்கங்கள் சீராக இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. டிரம்புக்கு இதுவரை இரண்டு முறை ரெம்டெசிவர் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.


latest tamil news


டிரம்ப் மனைவி மெலெனியாவுக்கும் கொரோனா உறுதியான நிலையில் அவருக்கு லேசான இருமலும் தலைவலியும் உள்ளதாக தெரிகிறது. அவர் வெள்ளைமாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டிரம்புடன் தொடர்பில் இருந்த உதவியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
05-அக்-202015:48:18 IST Report Abuse
S. Narayanan ட்ரெம்ப் விரைவில் குணமாவார்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-அக்-202014:13:50 IST Report Abuse
தமிழவேல் சென்ற புதனன்றே பாசிடிவில் இருந்து சொல்லாமல் மறைத்துள்ளதாகத் தகவல் .
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
05-அக்-202008:03:50 IST Report Abuse
ராஜா இப்பிடித்தான் எஸ்பிபிக்கும் சொன்னாங்க...
Rate this:
Valliappan - Chennai,இந்தியா
05-அக்-202019:32:46 IST Report Abuse
Valliappanரோட்ல போறவங்களுக்கு அச்சிடேன்ட் ஆகுது. எல்லாருக்கும் ஒரே மாதிரியா ஆகுது. இல்ல அதுனால ரோட்ல போக மாட்டிங்களா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X