அரசியல் செய்தி

தமிழ்நாடு

" எது நடந்ததோ நன்றாகவே நடந்தது "- பன்னீர்செல்வம் ‛டுவீட்'

Updated : அக் 05, 2020 | Added : அக் 05, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் குறித்து மோதல்கள் இருந்து வரும் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‛எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே
ADMK, OPS, Panneerselvam, அதிமுக, ஓபிஎஸ், பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் குறித்து மோதல்கள் இருந்து வரும் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‛எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் வரத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார். சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்ததை எதிர்த்து 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பன்னீர்செல்வம் பதவி விலகினார்.


latest tamil news



பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, அரசியல் சூழ்நிலைகள் மாறி, பன்னீர்செல்வம் அணியும், பழனிசாமி அணியும் இணைந்தன. கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பை பழனிசாமியும் ஏற்பதாக முடிவு செய்யப்பட்டு முதல்வராக தொடர்கிறார். இந்நிலையில், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் முதல்வர் வேட்பாளர் குறித்த மோதல் போக்கு மீண்டும் தொடங்கியது. இரு அணிகளும் மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யப்போவதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் பரபரப்பு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


latest tamil news



பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்,

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
06-அக்-202008:06:48 IST Report Abuse
P Sundaramurthy "பச்சை தண்ணி குடிச்சுட்டு பாயசம் சாப்டமாரி பில்டப்லாம் வேணாம்". சுருக்கமா டீல் முடிஞ்சிடுச்சின்னு சொன்னபோதும். இதற்காக கீதையை கொச்சைப்படுத்தவேண்டாம் .
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
06-அக்-202006:06:30 IST Report Abuse
Aanandh அப்ப "தொகை" முடிவாக செட்டிலாயுடுத்தா.........? சொல்லவே இல்லை.......
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-அக்-202019:34:42 IST Report Abuse
S.Baliah Seer -தமிழன் என்று சொல்லடா ,தலை நிமிர்ந்து நில்லடா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X