சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 05, 2020
Share
Advertisement
கையெழுத்தின் சிறப்புகம்ப்யூட்டர் பயன்படுத்தி எழுதும் சிறுவர்களை விட, பேப்பர் பேனாவில் எழுதும் சிறுவர்களுக்கு ஞாபக சக்தியும், புரிந்து கொள்ளும் திறனும் அதிகம் என அவர்களின் மூளை செயல்பாடு குறித்த ஆய்வு நடத்திய நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி அளிக்க தேவையில்லை. ஆனால்

கையெழுத்தின் சிறப்பு

கம்ப்யூட்டர் பயன்படுத்தி எழுதும் சிறுவர்களை விட, பேப்பர் பேனாவில் எழுதும் சிறுவர்களுக்கு ஞாபக சக்தியும், புரிந்து கொள்ளும் திறனும் அதிகம் என அவர்களின் மூளை செயல்பாடு குறித்த ஆய்வு நடத்திய நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி அளிக்க தேவையில்லை. ஆனால் ஆராய்ச்சியில் பேனாவில் எழுதும் மாணவர்களுக்கு திறன் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கும் இதே திறன் ஏற்படுகிறது.

தகவல் சுரங்கம்


நீளமான சுரங்கச்சாலை



உலகின் நீளமான சுரங்கச்சாலை நார்வே நாட்டின் வெஸ்ட்லேண்ட் பகுதியில் லார்டல் - ஆர்லேண்ட் நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் நீளம் 24.51 கி.மீ. இதில் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லலாம். சுரங்கச்சாலையின் அகலம் 30 அடி. இருவழிச்சாலையான இதில் ஒரு நாளைக்கு 2050 வாகனங்கள் செல்கின்றன. 25 லட்சம் கன மீட்டர் அளவிலான பாறைகள் உடைத்து எடுக்கப்பட்டு இச்சுரங்கச்சாலை அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டு களில் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. சுரங்கச்சாலை கடல் மட்டத்திலிருந்து 869 அடி உயரத்தில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X