'செயற்கை நுண்ணறிவின் மையமாக இந்தியா மாறும்'

Updated : அக் 07, 2020 | Added : அக் 05, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: ''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் உலகின் மையமாக இந்தியா மாறும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் , 'நிடி ஆயோக்' அமைப்பு இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவின்
'செயற்கை நுண்ணறிவின்  மையமாக இந்தியா மாறும்'

புதுடில்லி: ''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் உலகின் மையமாக இந்தியா மாறும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் , 'நிடி ஆயோக்' அமைப்பு இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் மூலம், சமூக மேம்பாட்டுக்கான முயற்சிகள் எனப்படும், 'ரெய்ஸ் 2020' என்ற இந்த மாநாட்டை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் வாயிலாக, பெரிய நன்மைகளைப் பெறலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு நாம் தயாரானோம். இந்த, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில், அந்தத் தொழில்நுட்பம் எந்தளவுக்கு நமக்கு உதவியது என்பதை கண்கூடாகப் பார்த்துள்ளோம்.

புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளோம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் மூலமாக கற்கும் முறையை இது ஊக்குவிக்குகிறது. மின்னணு பாடத் திட்டங்களை, மாநில மொழிகளில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம், தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பத்தையும், பல்வேறு பாடதிட்டத்தையும் மாணவர்கள் கற்க முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர்களுக்கான திட்டத்தை, ஏப்ரலில் அறிமுகம் செய்துள்ளோம். அதில், 11 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று, அடிப்படையை கற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதிய திட்டங்களை உருவாக்குவர்.செயற்கை நுண்ணறிவின் மூலம், சமூக மேம்பாடு, வளர்ச்சியை எட்ட முடியும். உலகின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையமாக, இந்தியா விரைவில் மாறும். இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (8)

Ramakrishnan R - Johilpatti,இந்தியா
06-அக்-202019:03:23 IST Report Abuse
Ramakrishnan R திரு சிவகுமார், பிரதமரின் ஆங்கில அறிவை சந்தேகபட வேண்டாம். அவருக்கு உங்களைவிட நுண்ணறிவு அதிகம். திரு மாலிக், கொரோனாவின் போது டிஜிட்டல் தொழில் நுட்பம் எவ்வாறு உதவுகிறதோ, அது போன்றே செயற்கை நுண்ணறிவும் மிகப் பயனுள்ள தொழில் நுட்பமாகும். கொரோன போன்ற மிகக் கொடிய நோயை ஆராய்ந்து தீர்வு காண இந்த தொழில் நுட்பம் மிகவும் அவசியம்.
Rate this:
Cancel
Sivakumar - Sydney,ஆஸ்திரேலியா
06-அக்-202017:12:26 IST Report Abuse
Sivakumar Can he spell AI in English.
Rate this:
blocked user - blocked,மயோட்
06-அக்-202018:26:13 IST Report Abuse
blocked userwhat about You? சோம்பேறிகள் தேசத்தில் இருந்து இந்தக்கருத்து தேவையற்றது....
Rate this:
06-அக்-202019:20:28 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அவன சொன்ன ஒரிஜினலுக்கு கோவம் வருது...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-அக்-202011:13:48 IST Report Abuse
Malick Raja இவர் பிரதமர்தானா என்று எண்ணுமளவுக்கு இவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருக்கிறது.. இப்போது நாட்டில் கொரோனா என்னும் தீ பற்றி எரியும்போது.. செயற்கை நுண்ணறிவாம் .. எதற்கு இதெல்லாம்.. எது தேவை என்பதை உணர்தலும் புரிதலும் ஆளுமைக்கு அவசியமானது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X