மங்கலம் ரோட்டிலுள்ள நவக்கிரஹ ரத்ன விநாயகர் கோவிலில், மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜைக்கு சித்ராவும் மித்ராவும் புறப்பட்டனர்.சப்-டிரஸ்ஸரி வழியே சென்ற போது, ''அக்கா, இந்த ஆபீசில் ஓவராக வசூல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம்'' என ஆரம்பித்தாள்.''மாவட்ட கருவூலத்துல இருந்து, 'ஸ்டாம்ப்' பேப்பர் எடுத்துட்டு வர்றாங்க. அதுக்காக, 'ஸ்டாம்ப் வென்டர்' கிட்ட, 500 ரூபாய் 'வரி' வசூலிக்கிறாங்களாம்.
இதுபோக, விற்பனையில் கிடைக்கும் கழிவு தொகையை, முழுசா கொடுங்கன்னு, சட்டம் பேசறாராம்.கொடுக்க மறுத்தால், வாரத்தில, மூணு நாள் மட்டுமே 'ஸ்டாம்ப்' பேப்பர் கிடைக்கும்னு கெடுபிடியாம். சில நாட்களுக்கு முன், அவிநாசியில இருந்து வந்த 'ஸ்டாம்ப்' பேப்பரை, தனக்கு வேண்டிய 'வென்டர்'க்கு மொத்தமா கொடுத்துட்டாராம்''''நான் மாவட்ட அதிகாரி மேலயே புகார் கொடுத்தவள்; என்னை பார்த்தால், அவரே பயப்படுவார். எந்த கொம்பனாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது'ன்னு, எல்லோரையும், மிரட்டி அடக்கிடறாராம்,''''இதெல்லாத்தையும் விட கொடுமை என்னன்னா, தாசில்தார் போனாலும் இதே கதிதான். யாருதான் பூனைக்கு மணி கட்டுவாங்களோ'னு புலம்பல் சத்தம் ஜாஸ்தியா கேக்குது,'' என்றாள் மித்ரா.
அப்போது, 'கீதா பூஜா ஸ்டோர்ஸ்' வரவே, சித்ரா வண்டியை நிறுத்தியதும், ஓரிரு நிமிடத்தில், பூஜை பொருள் வாங்கி வந்தாள் மித்ரா.வண்டியை கிளப்பிய சித்ரா, ''மித்து, நீ சொன்ன மாதிரியே இன்னொரு அதிகாரியும் இருக்காங்களாம். சப்--ஜெயிலுக்கு எதிரேயுள்ள அந்த மூன்றெழுத்து ஆபீஸ் முழுசும் சுத்திசுத்தி கேமரா மாட்டிட்டாங்க. யாரு, வர்றாங்க, போறாங்கன்னு, 'மொபைலில்' பார்த்துட்டு, எப்பப்பாரு, 'கவி'தை புக் படிச்சுட்டு, நாட்டாமை பண்றாங்களாம்,''''கல், மண் குவாரின்னு, சகட்டு மேனிக்கு வசூல் பண்றதால, இவங்ககிட்ட, 'வேலை செய்ய முடியாது'னு பி.ஏ.,வும் 'டிரான்ஸ்பர்' வாங்கிட்ட போயிட்டார்.
அடுத்து வந்தவரும், 'மெடிக்கல்' லீவுல 'எஸ்கேப்'பாம். ஆக மொத்தத்தில், கோட்ட ஆபீஸ் 'டோட்டலா' டேமேஜ் ஆகியிருக்குது,''''இதையெல்லாம், மாவட்ட அதிகாரி கண்டுகிட்டா பரவாயில்லையே'' என்ற சித்ரா, ''பல்லடம் தாலுகா ஆபீஸ் சர்வே செக் ஷனில், இடத்தை அளக்க மனு கொடுத்தால், ஒரு கி.மீ., துாரத்திலுள்ள பேங்க் சென்று, பணம் கட்டிட்டு, 'சலானை' கொண்டு போக வேண்டுமாம்,''''அந்த சலானையும் கூட, பக்கத்திலுள்ள ஜெராக்ஸ் கடையில், அஞ்சு ரூபா குடுத்து வாங்கிட்டு போய், மக்கள் சிரமப்படறாங்க. இதனால, 'நீங்க ஏன், கஷ்டப்படறீங்க?னு பச்சாதாபம் காட்டும் கும்பல், வேலய முடிச்சு குடுத்து, ஒரு அமவுன்ட் வசூல் பண்றாங்களாம்,''''எங்க, எப்டி, பணம் சம்பாதிக்கலாமுன்னு, ரூட்டை கண்டுபுடிக்கிறதில, சிலரு கில்லாடியா இருக்காங்க,'' என மித்ரா சொல்லி கொண்டிருந்த போது, வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஜீப் சென்றது. அதை பார்த்த மித்ரா, ''அக்கா, 'குளுகுளு' அதிகாரி, வசூலில் பட்டய கிளப்புறாராம்,'' என்றாள்.''ம்... ம்... நானும் கேள்விப்பட்டேன். 'வேந்தராக' இருக்க வேண்டியவர், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதால், மாதந்தோறும் வசூல் மழையில் நல்லாவே நனையறாராம்.
இவர பத்தி தெரிஞ்சும்கூட, மேலதிகாரிங்க மவுனமா இருக்காங்க. சென்னைக்கு 'ரிப்போர்ட்' அனுப்ப வேண்டிய, ஒற்றர்படையும் கண்டுக்கறதில்லையாம்,''''ரூரலில், சமீபகாலமாக குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களை, ஏ.ஆர்.,-க்கு இடமாற்றம் செஞ்சு, அப்புறமா சப்-டிவிஷன் மாத்துறாங்க. தற்போது, இதுல சிலர், அந்தந்த சப்-டிவிஷன் அதிகாரி துணையோடு, ஆளுங்கட்சியின் ஆசிர்வதத்தோடு, மேலதிகாரியை டிரான்ஸ்பர் செய்ய தீயாய் வேலை செய்றாங்களாம்,''''இதுக்கு, ஒற்றர்படையினரும் உடந்தையாக இருப்பதுதான், 'ைஹலைட்,'' என்றாள் மித்ரா.
''இருப்பாங்க மித்து, ஏன்னா, வருமானம் போகுதில்ல,'' என சிரித்த சித்ரா, ''கோழிப்பண்ணையூரில் உள்ள சப்-ரிஜிஸ்டர் ஆபீசில், வில்லங்கமான எந்த இடம் இருந்தாலும், மேட்டர்' கவனிச்சா, ரிஜிஸ்டர் ஆயிடுமாம்,''''இது தெரிஞ்சதால, சூரிய கட்சி கூட்டணிக்காரங்க, ஒண்ணு சேர்ந்து, பத்திரவுப்பதிவு மண்டல அதிகாரிகிட்ட புகார் மனு குடுத்திட்டாங்க. அவரும், ஒருத்தரை நியமிச்சு விசாரிச்சுட்டு இருக்காரு. இதனால, ஒரு கட்சியோட முக்கிய நிர்வாகிகிட்ட 'சரண்டர்' ஆன, 'சப்' ஆபீசர், பணத்தை தண்ணியா செலவு பண்றார்,''''என்ன செய்தாலும், அவரை மாத்தாம விட மாட்டோம்னு, சபதம் போட்டு, அதுக்குண்டான வேல நடக்குதாம்,'' என்றார்.
''நடக்கட்டும். அக்கா, சிட்டிக்கு புதுசா வந்துள்ள ஒரு அதிகாரி, குட்கா, கஞ்சா விக்கறவங்களை விரட்டி விரட்டி புடிக்கிறார். ஸ்டேஷன் ஆட்களை நம்பி பிரயோஜனமில்லைனு நினைத்த அவர், ரெண்டு ஸ்பெஷல் 'டீம்' போட்டு, சும்மா வெளுத்து கட்றார். இதே ஸ்பீடில் போனா, நெறய பெரிய தலைகள் மாட்டுவாங்க்கா,'' மித்ரா கூறி முடிக்கவும், கோவில் வரவும் சரியாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE