அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி, பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசனை

Updated : அக் 06, 2020 | Added : அக் 06, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று காலை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயகுமாருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, மீண்டும் மாலையில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார்.சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம்
துணைமுதல்வர், பன்னீர்செல்வம், அதிமுக, அஇஅதிமுக, அமைச்சர்கள், உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார்

சென்னை: நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று காலை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயகுமாருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, மீண்டும் மாலையில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால் அக். 2 இரவு பன்னீர்செல்வம் பெரியகுளம் வந்தார். அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ.க்கள் கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆதரவாளர்கள் அவரை சந்தித்தனர். முதல்வர் தரப்பிடமிருந்து சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதால் பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு காரில் புறப்பட்டு சென்னை சென்றார். நாளை (அக்.7) முதல்வர் வேட்பாளர் பெயர் சமரசத்திற்கு பிறகு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


latest tamil newsசென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், வீட்டில் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மாலையிலும் பன்னீர்செல்வம், வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமியும் தனது வீட்டில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-அக்-202022:46:31 IST Report Abuse
Bhaskaran சூசை நோகாமல் நொங்கு தின்ன கடுமையாக உழைக்கும் ஓ.பி எஸ் திமுகவினரால் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியவர்
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
06-அக்-202019:12:37 IST Report Abuse
Shroog Pre matured animal.
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
06-அக்-202019:09:38 IST Report Abuse
Shroog அந்த கண்டைனர் லாரியில் இருந்த பணம் எங்கே. ஒரு டீக்கடைக்காரன் கோடியில் புரளுகிறான். படித்தும் முட்டாள்கள் இந்தியர்கள். இன்னும் இந்த கொள்ளையர்களுக்கு ஒட்டு போட்டால் என்ன ஆகும்??.
Rate this:
skandh - Chennai,இந்தியா
08-அக்-202010:22:10 IST Report Abuse
skandhகண்ணா ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி மற்றெல்லாரும் டாக்டர், என்ஜினீயர்களோ? தமிழகத்தில் ஊழலை புகுத்திய இந்த குடும்பம் தமிழ் நாட்டுக்கு செய்த ஒரே ஒரு நல்ல காரியம் சொல்லு பார்ப்போம். தமிழை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறது குடும்பமே . கைத்தட்டு பார்ப்போம். எடப்பாடி ஒழிகென்னு கத்து. இந்த குடும்பம் வாழனும்னு கத்து. உன்னோட குடும்பம் உன்னை சபிக்கும் நாள் வரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X