அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய சட்டத்திற்கு எதிராக வழக்கு: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : அக் 06, 2020 | Added : அக் 06, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டசபையை கூட்ட பரிந்துரை செய்ய வேண்டும்; வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் இயற்றப்பட்ட
dmk,M.k.stalin, D.M.k., cm, edapadipalanisamy, palanisamy, letter, Farmbill, திமுக, ஸ்டாலின், மு.க., ஸ்டாலின், தி.மு.க.,  விவசாய மசோதா, வேளாண் மசோதா, முதல்வர்பழனிசாமி, கடிதம்

சென்னை: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டசபையை கூட்ட பரிந்துரை செய்ய வேண்டும்; வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களால், நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் குறிப்பாக தமிழக விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் தேவை அறிந்து அவற்றை நிறைவேற்றும் கடமை உணர்ச்சியுள்ள மாநில அரசு மட்டுமே பாதுகாவலனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில், காலம் காலமாக தரகர்களிடம் இருந்து காப்பாற்றி விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுதான் உறுதி செய்ய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் சாரங்களை மனதில் கொண்டு, வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க., சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, சட்டசபையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என திமுக சார்பில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.


latest tamil news


விவசாயிகளுக்கு கடுமையான நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்ற உடனடியாக தமிழக சட்டசபை கூட்டத்தை கூட்ட பரிந்துரை செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். விவசாயிகளின் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கைகள் மிக மிக அவசரமும் அவசியமும் ஆகும் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-அக்-202020:52:54 IST Report Abuse
Rajagopal விவசாய சட்டத் திருத்தத்தில் எது விவசாயிகளை பாதிக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தால் நியாயமாக இருக்கும். அரசும் அதற்கு வேண்டிய பதில் அளிக்க முடியும். அப்படி செய்யாமல் விவசாய சட்டம் நாட்டை அதிர வைக்கிறது என்றால் அது வெறும் கூச்சல்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
06-அக்-202020:20:36 IST Report Abuse
vbs manian ஐவரும் சரி ராகுலும் சரி வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் என்ன என்று சொல்ல முடியவில்லை. வெறும் அர்த்தமில்லாத எதிர்ப்பு பிரச்சாரம். குறிப்பு எழுதி கொடுத்தவர்களுக்கு கூட ஒன்றும் தெரியவில்லை. நல்ல விலை கிடைப்பதற்கு எல்லா விவசாயிகளும் வரவேற்பார்கள். விவசாயிகள் வியர்வை உழைப்பு வலி அரசியல் தலைகளுக்கு தெரியாது.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
06-அக்-202019:40:34 IST Report Abuse
dina விவசாய சட்டத்திற்கு எதிராக வழக்கு பற்றிய சுடலை ஸ்டாலின் கடிதம் தவறாமல் குப்பை தொட்டியில் போட்டுவிடவும் திரு எடப்பாடி அவர்களே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X