அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டத்தில் குழப்பமில்லை: நிர்மலா சீதாராமன்

Updated : அக் 06, 2020 | Added : அக் 06, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: வேளாண் சட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.வேளாண் சட்டங்கள் தொடர்பாக நிருபர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த வேளாண் சட்டம் பார்லிமென்டின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களும் நீண்ட நாட்களாக நிலுவையில்
BJP, Nirmala, Nirmala Sitharaman, நிர்மலா, நிர்மலா சீதாராமன்

சென்னை: வேளாண் சட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக நிருபர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த வேளாண் சட்டம் பார்லிமென்டின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சீர்திருத்தம். தற்போது விளைபொருட்களின் விலை, யாரிடம் விற்பனை செய்ய வேண்டும் என்பதை விவசாயிகள் தீர்மானிக்க முடியும். மாநிலங்களுக்கு இடையே பொருட்களை விற்பனை செய்யலாம். மாநில வேளாண் சந்தைகள் மாற்றப்படவில்லை.


latest tamil news



ஆதாயம் கிடைக்க கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளை பொருளை விற்கலாம். மாநிலங்களுக்கு இடையே விளை பொருட்களை விற்கும் முறை மத்திய அரசின் வசம்தான் உள்ளது. வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை. உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது. விளைபொருட்களை எவ்வளவு விலைக்கு, யாரிடம் விற்பது என விவசாயிகள் முடிவு செய்யலாம்.


latest tamil news



8- 8.5 சதவீதம் வரை மண்டிகளில் கட்டணமாகவும் இடைத்தரகர்களுக்கு வரியாகவும் கட்டிக்கொண்டிருந்த விவசாயிகள் இனி அந்த வரியை செலுத்த தேவையில்லை. ஏபிஎம்சி சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்தால், 8.5 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை. விளைபொருட்களை பெற்றவுடன் ரசீதும் 3ல் 2 பங்கு தொகையும் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
06-அக்-202022:02:15 IST Report Abuse
J.Isaac கருத்து எழுதும் எத்தனை பேருக்கு விவசாயம் தெரியும். நாட்டின் முதுகெலும்பு முறிக்கப்படுகிறது
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
07-அக்-202013:26:07 IST Report Abuse
Dr. Suriyaமுதுகெலும்பு உடைத்தால் புதூர் கட்டு போட்டு கொள்ளலாம் சட்டம் மறு சீரமைப்பு என்ற பெயரில்.... ... ஆனால் காங்கிரஸ் ஆட்சி பல விவசாயிகள் உயிரை எடுத்ததே ... தற்கொலை என்ற வடிவில் அதுக்கு என்ன சொல்ல போறீங்க ...........
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
06-அக்-202021:18:49 IST Report Abuse
Natarajan Ramasamy கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நிதானமாக புரியும்படி திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அர்னாப் ராகுல் பேட்டி போல் இல்லை.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-அக்-202019:00:25 IST Report Abuse
sankaseshan ஆப்பு, உனக்கு விவசாயத்தையும் அதுக்கு நிதி வழங்குவது பற்றியும் ஏன்னா தெரியும் ? கமெண்ட் செய்ய ஏதாவது அடிச்சு விடணும் .விவசாயம் மட்டுமல்ல எல்லா துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வ து நிதி அமைச்சர்தான் ஆகவே பிற துறைகளின் செயல் பாடும் அவருக்கு தெரியும் உன்னை போன்ற அரை வேக்காடுகளுக்கு புரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X