கொரோனா பாதிப்பு: டிரம்ப் விரைவில் மீண்டதன் காரணம் என்ன?

Updated : அக் 06, 2020 | Added : அக் 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன.latest tamil newsமருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், 'கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்' என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது பிரச்சாரத்தை கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது.

'கொரோனா காலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை துவங்கிவிட்டேன். ஒருவேளை எனக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் நான் மன தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்' என, வீராவேசமாக டிரம்ப் தனது உரையை துவங்கியுள்ளார்.


latest tamil newsடிரம்ப் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவருக்கு அளிக்கப்பட்ட விசேஷ சிகிச்சை என்பதையும் மறுக்க முடியாது. டிரம்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேகமாக 'ரிஜெனரல் எக்பெரிமெண்டல் ஆன்டிபாடி தெரபி' என்ற பிரத்தியேக தெரபி முறை அவர் உடலில் பயன்படுத்தப்பட்டது. இந்தமுறை இதற்கு முன்னர் 275 நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்தது. இந்த தெரபி எடுத்துக் கொள்வது சாமானியர்களுக்கு சாத்தியப்படாத ஒன்று. இந்த தெரபியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு இதுவரை அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத சிகிச்சையை அமெரிக்க குடிமக்கள் பெற இயலாது. ஆனால் டிரம்புக்கு மட்டும் பிரத்யேகமாக இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
alamu - bharain,பஹ்ரைன்
07-அக்-202011:48:36 IST Report Abuse
alamu Maybe the virus actually attacks intelligent life, so he's safe...
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
07-அக்-202007:57:47 IST Report Abuse
Lakshmipathi S எது எப்படியோ நம் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டியது எதோ உள்ளது. விரைவில் குணமடைந்த டிரம்ப் ,எழுபது வயதை கடந்தவர் என்றாலும் அவர் பொது வாழ்வில் ஈடுபடுவது தேவையில்லை. செல்வந்தரான அவர் ஓய்வு பெறவேண்டிய வயதில் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கமே அவரை விரைவில் குணமடைய செய்திருக்கும் என நம் பாசிட்டிவாக எடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர் நம் நாட்டிற்கு எதிரி அல்ல.நம் மக்கள் அதிகம் வாழும் அமெரிக்காவில் அவர் பாதுகாப்பு அளிப்பார் என நம்புவோம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
06-அக்-202022:10:43 IST Report Abuse
Ramesh Sargam "கொரோனா பாதிப்பு: டிரம்ப் விரைவில் மீண்டதன் காரணம் என்ன?" - For all your information: டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏட்படவே இல்லை. அது ஒரு நாடகம். நாம் எல்லாம் நமது அரசியல்வாதிகள் செய்யும் நாடகத்தைத்தான் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அயல்நாட்டு அரசியல்வாதிகள் நாடகம். உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டும். முதலில் வந்த செய்தி, ட்ரம்ப் தனக்கு கொரோனா பாதிப்பு என்று ஒரு அறிக்கை விட்டார். அடுத்து மருத்துவமனையில் அனுமதி. அங்கு மருத்துவர்கள் நிலைமை சீரியஸ் என்று கூறி அடுத்த 48 மணிநேரம் ஒன்றும் கூறமுடியாது என்று அறிவிப்பு. இங்குதான் நாம் அனைவரும் கவனிக்கவேண்டும். மருத்துவர்கள் கூறிய அந்த 48 மணி நேரம் முடிவதற்குள், ட்ரம்ப் காரில் கையசைத்தபடி செல்கிறார். எப்படி ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள். "அரசியல்ல சகஜமப்பா" அங்கும் சகஜம் போல இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X