புதுடில்லி : இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் கோல்கட்டாவில் தான் குறைந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ( என்சிஆர்பி ) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகி உள்ளன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது 2018 ஆம் ஆண்டை விட ஏழு சதவீதத்திற்கும் மேலானது. இந்தியாவின் 19 பெரு / மெட்ரோ நகரங்களில் மேற்கு வங்கத்தின் கோல்கட்டா நகரில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறைவாக உள்ளது என என்சிஆர்பி தெரிவித்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் நகரில் 14 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோல்கட்டாவை போன்று, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரும் எந்தவொரு பாலியல் துன்புறுத்தல் வழக்கையும் பதிவு செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. என்சிஆர்பி தரவுகளின்படி, கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டில்லியில் 12,902 எனவும், மும்பையில் 6,519 வழக்குகளும் பதியப்பட்டன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில், அதிக குற்றங்களுடன் உ.பி.,(59,853 ) முதலிடத்திலும், 41,550 குற்ற வழக்குடன் ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும், 37,144 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளன. ஆயினும் தண்டனை விகிதம் 27.8% ஆக குறைவாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை 'கணவர் / உறவினர்களால் கொடுமை' (30.9%) மற்றும் 'அவரது அடக்கத்தை சீற்றப்படுத்தும் நோக்கில் பெண்கள் மீதான தாக்குதல்' (21.8%), 'பெண்களைக் கடத்தல்' (17.9%) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE