பிரதமரின் விமானத்தில் சொகுசு படுக்கை எதற்கு? டிராக்டர் சீட் விமர்சனத்தால் ராகுல் கொதிப்பு

Updated : அக் 06, 2020 | Added : அக் 06, 2020 | கருத்துகள் (69)
Share
Advertisement
சண்டிகர்: டிராக்டர் பேரணியின் போது குஷன் சீட் பொருத்தி பயணித்த ராகுலை பா.ஜ., விமர்சித்திருந்தது. அதற்கு பதிலளித்த ராகுல், 'பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல சொகுசு படுக்கைகள் உள்ளன' என, பதிலளித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மண்டி முறை பெரியளவில்

சண்டிகர்: டிராக்டர் பேரணியின் போது குஷன் சீட் பொருத்தி பயணித்த ராகுலை பா.ஜ., விமர்சித்திருந்தது. அதற்கு பதிலளித்த ராகுல், 'பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல சொகுசு படுக்கைகள் உள்ளன' என, பதிலளித்துள்ளார்.



latest tamil news



மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மண்டி முறை பெரியளவில் செயல்படுவதால், இம்மசோதா மண்டி முறையை ஒழித்துவிடுமோ என்ற அச்சத்தில் அம்மாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் தலைமையில் பஞ்சாபில் தொடங்கிய டிராக்டர் பேரணி அரியானா மாநிலத்திற்கு இன்று வந்தது. அவரை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.


latest tamil news



அப்போது, 'எங்களை தடுத்துள்ளார்கள். 2 மணி நேரம் அல்ல, 24 மணி நேரம் அல்ல, 500 மணி நேரம் ஆனாலும் இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன். அவர்கள் வழிவிட்டால் அமைதியான முறையில் பேரணியை வழி நடத்துவேன். இல்லை என்றால் அமைதியான முறையில் இங்கேயே காத்திருப்பேன்' என, ராகுல் தெரிவித்தார். அதன்பின், நூறு பேர் மற்றும் 3 டிராக்டர்களை மட்டும் அரியானா அரசு அனுமதித்தது.


latest tamil news



இந்நிலையில், டிராக்டர் பேரணியின் போது குஷன் சீட் பொருத்தி ராகுல் பயணித்ததை பா.ஜ., விமர்சித்தது. அரியானாவின் சிர்சா பகுதியை அடைந்த ராகுல் இதற்கு பதிலளித்து பேசுகையில், 'பிரதமர் மோடி தனது நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு 'ஏர் போர்ஸ் ஒன்' விமானம் இருப்பதைக் பார்த்துவிட்டு, தனக்கு 'ஏர் இந்தியா ஒன்னை' வாங்கியுள்ளார். டிராக்டரில் குஷன் சீட் இருப்பது புதிதல்ல. ஆனால், பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல சொகுசு படுக்கைகள் உள்ளன. அது பிரதமருக்கு எதற்கு. மோடி வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கிறார்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-அக்-202016:44:48 IST Report Abuse
Malick Raja அப்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் அது அவனது சொந்த பணம் .. நேற்றுவரை பிளாட்பாரத்தில் டீ யை கூவி கூவி விற்றவருக்கு உல்லாச வாகனம் இருப்பதில் தவறில்லை என்பது பல பார தீய ஜனதா கட்சிக்காரர்களின் எண்ணமாக இருப்பதில் தவறிருக்க வாய்ப்பில்லை
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
07-அக்-202014:02:11 IST Report Abuse
Murthy ஒருவேளை கொன்கிரேஸ் ஆட்சிக்கு வரும்போது இந்த விமானம் பயணிகளின் விமானமாக மாற்றி அமைக்கப்படும்.
Rate this:
Cancel
Arunkumar Venkataraman - Chennai,இந்தியா
07-அக்-202013:19:40 IST Report Abuse
Arunkumar Venkataraman நியாயமன கேள்வி, மற்றவரை குறை சொல்லும் முன்பு தான் யோக்கியமானவனா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X